ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு திரைத்துறையினர் இஷ்டம் போல் பேசுவது அதிகரித்துள்ளது என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை கூறியிருக்கிறார்.
அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் “ ஜெயலலிதா மறைவுக்கு பிறகு திரைப்படத்துறையினர் இஷ்டம் போல் பேசுவது அதிகரித்துள்ளது. மெர்சல் குறித்து நான் தவறையே பதிவு செய்தேன்; தவறாக பதிவு செய்யவில்லை.கருத்து கூறுவதற்கு உரிமை உள்ளது, அதேபோல் தவறான கருத்தை மறுப்பதற்கும் உரிமை உள்ளது.”என்று கூறியிருக்கிறார்.
மெர்சல் படத்தில் ஜிஎஸ்டி வரி விதிப்பு உள்ளிட்ட விஷயங்கள் குறித்த விமர்சன வசனங்களால் தமிழக பாஜக தலைவர்கள் கடும் அதிருப்தி அடைந்து கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.