மனநலம் சரியில்லாதவர்களும் வாக்களிக்கலாம் ! தமிழகத்தில் ஒரு புதிய முயற்சி

மனநலம் சரியில்லாதவர்களும் வாக்களிக்கலாம் ! தமிழகத்தில் ஒரு புதிய முயற்சி
மனநலம் சரியில்லாதவர்களும் வாக்களிக்கலாம் ! தமிழகத்தில் ஒரு புதிய முயற்சி
Published on

தமிழகம் மற்றும் புதுவையில் ஏப்ரல் 18 ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இம்முறை மனநலம் சரியில்லாதவர்களும் வாக்களிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவமனையில் தமிழகத்தில் முதல் முறையாக வாக்களிக்கும் முறையை கொண்டு வந்தனர் தேர்தல் நடத்தும் அதிகாரிகள். சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மனநல காப்பகத்தில் 900 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் வாக்களிக்கும் தகுதி உடையவர்களை 192 பேரை மருத்துவர்கள் தேர்வு செய்து அவர்களுக்கான அடையாளம் அட்டை வாக்கு ,சீட்டு,என அனைத்து ஏற்பாடுகளையும் செய்து உள்ளனர்.

இதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவமனையில் நடைபெற்றது  இதில் தேர்தல் பார்வையாளர்கள், அரசு மனநல மருத்துவமனை இயக்குநர் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர். மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் வாக்கு பதிவு இயந்திரம் வைத்து விழிப்புணர்வு செய்தனர். 

வாக்கு அளிக்கும் அவசியம் குறித்து கிராமிய கலை நிகழ்ச்சி அவர்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் நடைபெற்றது. தேர்தல் நடைபெரும் அன்று கீழ்ப்பாக்கம் அரசு மனநல காப்பகத்தில்  வாக்குசெலுத்தும் வகையில் அனைத்து ஏற்பாடுகளையும் செய்யப்பட்ட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதேபோன்று ,கர்நாடக,கொல்கத்தா, ஆகிய மாநிலங்களில் நடைமுறைபடுத்தப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com