டிரெண்டிங்
டிடிவி உடனான சந்திப்பு என் வாழ்நாளில் நடக்காது: எம்எல்ஏ மாணிக்கம்
டிடிவி உடனான சந்திப்பு என் வாழ்நாளில் நடக்காது: எம்எல்ஏ மாணிக்கம்
டிடிவி தினகரன் உடனான சந்திப்பு என் வாழ்நாளில் நடக்காது என ஓபிஎஸ் அணி ஆதரவு எம்எல்ஏ மாணிக்கம் தெரிவித்துள்ளார்.
அதிமுக அம்மா அணி துணைப் பொதுச்செயலாளர் தினகரனும் ஓபிஎஸ் அணி ஆதரவு எம்.எல்.ஏ மாணிக்கமும் ஒரே நேரத்தில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் இன்று தரிசனம் செய்தனர். அப்போது இருவரும் பேசிக்கொண்டதாக தகவல் வெளியானது. இந்நிலையில் இதுகுறித்து கோயிலிக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய எம்எல்ஏ மாணிக்கம், "இன்று குடும்பத்தோடு சாமி தரிசனம் செய்ய மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வந்தேன். டிடிவி தினகரன் இங்கு வந்தது தெரியாது. அவரை நான் சந்திக்கவில்லை. அப்படியொரு சந்திப்பு என் வாழ்நாளில் நடக்காது" என்றார்.