நாடாளுமன்றத்திற்கு சென்ற மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, அண்ணா உள்ளிட்டோரின் சிலைகளுக்கு மரியாதை செலுத்தினார்.
வைகோ மாநிலங்களவை உறுப்பினராக ஜூலை 25-ஆம் தேதி பதவியேற்கிறார். அன்றைய தினமே திமுக உறுப்பினர்களான சண்முகம், வில்சன் ஆகியோரும் பதவி ஏற்கின்றனர். நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்பதற்காக வைகோ டெல்லி சென்றுள்ளார். டெல்லி விமான நிலையத்தில் அவருக்கு மதிமுகவினர் மாலை அணிவித்து வரவேற்றனர்.
இந்நிலையில், நாடாளுமன்றத்தின் நுழைவாயிலில் உள்ள அண்ணா, காமராஜர், முத்துராமலிங்க தேவர் ஆகியோரின் சிலைகளுக்கு மரியாதை செலுத்தினார்.
இதனிடையே, இன்று நாடாளுமன்ற வளாகத்தில் வைகோவுடன் சுப்பிரமணியசாமி சந்தித்தார். வைகோ மாநிலங்களவை உறுப்பினர் ஆக கூடாது என சமீபத்தில் சுப்ரமணியன் சுவாமி கடுமையாக விமர்சனம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சந்திப்பு தொடர்பாக தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் சுப்ரமணியன் சுவாமி ஒரு பதிவிட்டிருந்தார். அதில், வைகோவுக்கு வாழ்த்து தெரிவித்ததாக கூறியிருந்தார்.