மருத்துவமனையில் வேலை வாங்கி தருவதாக பலரிடம் மோசடி... போலி மருத்துவர் கைது..!

மருத்துவமனையில் வேலை வாங்கி தருவதாக பலரிடம் மோசடி... போலி மருத்துவர் கைது..!
மருத்துவமனையில் வேலை வாங்கி தருவதாக பலரிடம் மோசடி... போலி மருத்துவர் கைது..!
Published on

வேலூர் தனியார் மருத்துவமனையில் வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் பணம் பெற்று மோசடி செய்த போலி டாக்டர் கைது செய்யப்பட்டார்.

 
வேலூர் மாவட்டம் காட்பாடி கல்புதூர் பகுதியை சேர்ந்த குமார் என்பவரின் மகள் அனிதா. இவர் பிபிஏ படித்துவிட்டு காந்தி நகரில் உள்ள ஒரு கணினி மையத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ஓ.எல்.எக்ஸ் இணையதளத்தில் வேலூரில் உள்ள பிரபல தனியார்  மருத்துவமனையில் பல்வேறு வேலைவாய்ப்புகள் உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

 
இதனை பார்த்த அனிதா அதில் இருந்த தொடர்பு எண்ணை தொடர்பு கொண்டபோது அந்த மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டர் உதயகுமார் என கூறி ஒருவர் பேசியுள்ளார். அனிதாவுக்கு பார்மசி டிபார்ட்மெண்டில் வேலை வழங்குவதாக கூறிய உதயகுமார் நேரில் வந்து ரூ.50 ஆயிரம் பணம் பெற்று சென்றுள்ளார்.

 
பின்னர் அனிதாவை சி.எம்.சி மருத்துவமனையில் பணி செய்யும் பெண் டாக்டரிடம் அழைத்து சென்று பேச வைத்துள்ளார். ஆனால் வேலை கிடைத்தபாடில்லை இதனால் இவர்கள் பணத்தை திருப்பி கேட்டபோது உதயகுமாரே பெண் குரலில் பேசி தாங்கள் முழு பணத்தையும் கொடுத்தால் பணிக்கு சேர்ப்பதாக கூறியுள்ளார்.


இதனைத் தொடர்ந்து கடந்த 21ஆம் தேதி உதயகுமாரின் செல்போன் முழுமையாக ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனால் சந்தேகமடைந்த அனிதா சி.எம்.சி மருத்துவமனைக்கு நேரில் சென்று விசாரித்த போது டாக்டர் உதயகுமார் என யாரும் இங்கு பணிபுரியவில்லை தாங்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறீர்கள் என மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது.

 
இதனால் தன்னை ஏமாற்றிய நபர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அனிதா காட்பாடி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதன் அடிப்படையில் காட்பாடி காவல்துறையினர் வழக்குப் பதிவுசெய்து கருகம்புத்தூரை சேர்ந்த உதயகுமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் இவர் சி.எம்.சி மருத்துவர் என கூறிகொண்டு பலரிடம் பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது.

 
இவர் மீது வேலூர், பாகாயம் ஆகிய காவல் நிலையங்களிலும் புகார்கள் உள்ளதும் தெரியவந்தது. இது தொடர்பாக காட்பாடி காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com