காதலியின் உயர் ரக ஹேண்ட் பேக்கில் சிறுநீர் கழித்த காதலனுக்கு 91 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்ட சம்பவம் தென் கொரியாவில் அரங்கேறியிருக்கிறது. இத்தனை பெரிய தொகையை அபராதமாக விதிக்கும் அளவுக்கு அப்படி என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
காதல் உறவுக்குள் சண்டை சச்சரவுகள் இருப்பது எப்போதும் வழக்கமான ஒன்றுதான். ஆனால் அந்த சண்டைகள் பெரிதளவில் நீடித்தால் அது ஒரு கட்டத்தில் பிரேக்கப்பில் இட்டுச்செல்லும்.
இதனால் இருவருக்குள்ளும் இடையே காதல் உணர்வு இல்லாமல் போய் ஈகோவும் வஞ்சகமுமே பெருகுவதற்கு வாய்ப்புண்டாகும். அந்த வகையிலான சம்பவத்தில்தான் தென் கொரியாவைச் சேர்ந்த அந்த காதலனும் சிக்கியிருக்கிறார்.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் Gangnam-gu என்ற பகுதியில் உள்ள காதலியின் வீட்டுக்குச் சென்றிருக்கிறார் 31 வயதான அந்த காதலன். அங்கு இருவரும் நேரம் செலவிட்ட போது இருவருக்குள்ளும் வாக்குவாதம் முற்றியிருக்கிறது.
இதனால் சற்று ஆத்திரமடைந்த அந்த காதலன் நேராக காதலியின் அறைக்குள் சென்று அவரது உயர் ரக louis vuitton ஹேண்ட் பேக்கில் சிறுநீர் கழித்திருக்கிறார். இதனால் எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்றுவது போல நடந்துக்கொண்ட காதலனில் செயலால் அந்த காதலில் மேலும் கோபத்தின் உச்சிக்கு சென்றிருக்கிறார்.
தனது காஸ்ட்லி ஹேண்ட் பேக்கில் சிறுநீர் கழித்ததற்காக அதற்கு நஷ்ட ஈடு கேட்டு நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்திருக்கிறார் அந்த பெண். அதன்படி வழக்கும் விசாரணையில் இருந்து வந்தது.
அதில், தான் சிறுநீர் கழிக்கவில்லை என்றும் காதலியை வெறுப்பேற்றுவதற்காக பாசாங்கு காட்டினேன் என்றும் அந்த நபர் கூறியிருக்கிறார். இருப்பினும் டி.என்.ஏ. பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் அந்த நபர் பெண்ணின் ஹேண்ட் பேக்கில் சிறுநீர் கழித்தது நிரூபணமாகியிருக்கிறது.
இதனையடுத்து அந்த காதலன் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டதோடு, அபராதமாக 1,150 அமெரிக்க டாலர் (₹91,634) விதிக்கப்பட்டிருக்கிறது. தற்போது இந்த செய்திதான் தென் கொரிய மக்களிடையே ஹாட் டாபிக்காக இருக்கிறது என செய்திகள் மூலம் தெரிந்துக்கொள்ள முடிகிறது.