’என்னையா சீண்டுற!’.. தூண்டில் போட்டு மீன் பிடித்தவரை துரத்தி துரத்தி ஓடவிட்ட முதலை!

’என்னையா சீண்டுற!’.. தூண்டில் போட்டு மீன் பிடித்தவரை துரத்தி துரத்தி ஓடவிட்ட முதலை!
’என்னையா சீண்டுற!’.. தூண்டில் போட்டு மீன் பிடித்தவரை துரத்தி துரத்தி ஓடவிட்ட முதலை!
Published on

சமூக ஊடகங்களில் தினமும் பல வீடியோகள் வைரலாகும். சமயங்களில் பழைய வீடியோ கூட மீண்டும் காரணமில்லாமல் வைரலாகும். அந்த வகையில் 2021 ஆம் ஆண்டிலிருந்து எடுக்கப்பட்ட இந்த வீடியோ மீண்டும் இணையத்தில் பரவி வருகிறது.

அமெரிக்காவின் புளோரிடா மகாணத்தில் 22 வயதான டாமி லீ என்ற இளைஞர், எவர்கிளேட்ஸ் நேஷ்னஸ் பார்க்கில், விடியற்காலை நேரத்தில் தூண்டி வைத்து மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, திடீரென்று ஒரு முதலை தண்ணீரிலிருந்து வெளி வந்து லீயை துரத்துக்கொண்டு தரை பகுதிக்கு வருகிறது. அதிர்ச்சியடைந்த லீ ஓட ஆரம்பித்து, செடிகள் நிறைந்திருக்கும் சின்ன பாதையுள்ள பகுதிகுள் ஓடுகிறார். சற்று ஓடியது செடிகள் தடுக்குகிறது, தடுமாறு நிற்கும் லீ, திரும்பி பார்க்கிறார். முதலையும் நின்று லீயின் அசைவுகளை கவனிக்கிறது. லீ உடனே முதலையிடம் போ என்கிறார். உடனே அந்த முதலை மீண்டும் துரத்துகிறது. லீ ஓட ஆரம்பிக்கிறார்.

சற்று தூரம் சென்ற லீ திரும்பி பார்த்தபோது முதலையை காணவில்லை. செடிகள் நிறைந்த அந்த பகுதியில் முன்னே சென்று பார்த்தப்போது, தூரத்திய முதலை மீண்டும் தண்ணீருக்குள் சென்றுகொண்டிருந்தது. 

 " புளோரிடாவில் ஒரு முதலையுடனான மோதலிலிருந்து தப்பியவர்" என்று  இந்த வீடியோ இப்போது வைரலாகி வருகிறது. 

வீடியோவை காண இங்கே கிளிக் செய்யவும் - https://twitter.com/i/status/1569496836137697286

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com