”உனக்கு பிடிக்குமா? எனக்கும் பிடிக்கும்” ஜிம் வாசலில் பீட்சாவை காட்டி வெறுப்பேற்றிய இளைஞர்

”உனக்கு பிடிக்குமா? எனக்கும் பிடிக்கும்” ஜிம் வாசலில் பீட்சாவை காட்டி வெறுப்பேற்றிய இளைஞர்
”உனக்கு பிடிக்குமா? எனக்கும் பிடிக்கும்” ஜிம் வாசலில் பீட்சாவை காட்டி வெறுப்பேற்றிய இளைஞர்
Published on

உடல் ஆரோக்கியத்தை பராமரிக்க வேண்டுமென்றால் உடற்பயிற்சி, டயட் போன்றவற்றை தொடர்ந்து கண்காணித்து அதனை முறையாக பின்பற்ற வேண்டும் என்பது நிபுணர்களின் முக்கியமான அறிவுறுத்தலாகவே இருக்கும். இருப்பினும் தொடக்கத்தில் அதனை ஃபாலோ செய்வதெல்லாம் மிகப்பெரிய சவாலான வேலையாகத்தான் இருக்கும்.

சிலர் பிடித்தமான உணவுகளை எப்படியாவது சாப்பிட்டுவிட வேண்டும் என்பதற்காக வாரத்தில் ஒரு முறையாவது cheat day என்ற பழக்கத்திலும் ஈடுபடுவார்கள். இப்படி இருக்கையில் டயட்டில் இருக்கும், தொடர்ந்து உடற்பயிற்சி மேற்கொள்வோரை எப்போதும் சீண்டுவோராக இருப்பது என்னவோ நண்பர்களாகவே இருப்பார்கள்.

எப்போ வெளியேச் சென்றாலும் நல்லா ருசியாக இருக்கும் உணவுகளையே ஆர்டர் செய்து வெறுப்பேற்றும் நிகழ்வுகள் எங்குமே நடக்கும். அந்த வகையிலான வீடியோதான் ட்விட்டர் தளத்தில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.

டிக்டாக் வீடியோவான அதில் ஜிம்மில் ஆண்கள் பெண்கள் என ட்ரெட்மில்லில் ஓடிக் கொண்டிருக்க வெளியே இருந்த ஒருவர் கையில் பீட்சாவை வைத்துக் கொண்டு ஜிம்மில் வொர்க் அவுட் செய்பவர்களுக்கு ஒழுங்கு காட்டிக்கொண்டே சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார். பீட்சாவை வாயில் வைத்தபடி வெறுப்பேற்றிக் கொண்டே ட்ரெட்மில்லில் ஓடுபவரை பார்த்து உம்ம்ம் ஓடுங்க.. என சொல்வது போல சைகை காட்டுகிறார்.

இந்த வீடியோவை கண்ட நெட்டிசன்கள் பலரும் ”இதேப்போன்று நானும் செய்திருக்கிறேன்” , ”இந்த மாதிரியான நண்பன் எல்லாம் குரூப்பிலும் இருப்பான்” என்றும் கமெண்ட் செய்திருக்கிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com