’திமுகவுக்கு வாக்களிக்க மாட்டோம்’ - கருணாநிதி சிலையிடம் திருப்பரங்குன்றம் நிர்வாகிகள் மனு!

’திமுகவுக்கு வாக்களிக்க மாட்டோம்’ - கருணாநிதி சிலையிடம் திருப்பரங்குன்றம் நிர்வாகிகள் மனு!
’திமுகவுக்கு வாக்களிக்க மாட்டோம்’ - கருணாநிதி சிலையிடம் திருப்பரங்குன்றம் நிர்வாகிகள் மனு!
Published on

திமுக சட்டப்பேரவை உறுப்பினர் மருத்துவர் சரவணனுக்கு சீட் வழங்கக்கோரி கருணாநிதி சிலையிடம் மனு அளித்த திமுகவினர், திமுகவுக்கு வாக்களிக்க மாட்டோம் எனவும், பணிசெய்ய போவதில்லை எனவும் ஆவேசமாக தெரிவித்துள்ளனர்.

மதுரை திருப்பரங்குன்றம் சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் சரவணனுக்கு சீட் வழங்கக்கோரி திமுகவினர் சிம்மக்கல் பகுதியில் உள்ள கருணாநிதி சிலையிடம் மனுக் கொடுத்தனர். சட்டபேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் அக்கட்சி புறநகர் கிழக்கு மாவட்டச் செயலாளர் விவி.ராஜன் செல்லப்பா திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிடுகிறார்.

இவர் கடந்த முறை மதுரை வடக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த முறை அங்கிருந்து தொகுதி மாறி திருப்பரங்குன்றத்தில் போட்டியிடுகிறார். அமமுக சார்பில் முன்னாள் அமைச்சர் காளிமுத்து மகன் டேவிட் அண்ணாத்துரை போட்டியிடுகிறார்.

திருப்பரங்குன்றம் தொகுதி எம்எல்ஏ ஏ.கே.போஸ் இறந்ததால் நடந்த இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட டாக்டர் சரவணன் ஆளும்கட்சி செல்வாக்கை தாண்டி வெற்றி பெற்றார். அதிமுக 8 முறை வெற்றி பெற்ற இந்தத் தொகுதியில் திமுக வேட்பாளர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதால் இந்த முறை மீண்டும் திமுகவே நேரடியாக போட்டியிடும் என்றும், அக்கட்சி சார்பில் தற்போதைய எம்எல்ஏ டாக்டர் சரணவனனே நிறுத்தப்படுவார் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் கடைசி நேரத்தில் இந்தத் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டதால் டாக்டர் சரவணனின் ஆதரவாளர்கள் மற்றும் திமுகவினர் அதிருப்தியில் உள்ளனர். திமுக வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியான நிலையில் மருத்துவர் சரவணனுக்கு சீட்கிடைக்காததால் பல்வேறு போராட்டங்களை அவரது ஆதரவாளர்களும், திமுகவினரும் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் கடிதம் ஒன்றை எழுதி கலைஞர் சிலை முன் வைத்து நூதன முறையில் போராட்டம் நடத்தினர். கடிதத்தில் திமுக வேட்பாளர் பட்டியலில் குழப்பமும், குறைப்பாடும் உள்ளதாகவும், திமுக வெற்றி பெறும் சூழல் இருப்பதால் திமுக வேட்பாளர் பட்டியலை மறுபரிசீலனை செய்யக்கோரி போராட்டம் நடத்தினர். தொடர்ந்து திருப்பரங்குன்றம் தொகுதியில் திமுக வெற்றிக்கு பணி செய்ய போவதில்லை எனவும், திமுகவுக்கு வாக்களிக்க மாட்டோம் எனவும் தெரிவித்தனர்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com