கொரோனா அச்சம்: மதுரையில் 99 காவலர்களுக்கு ஓய்வு வழங்கி உத்தரவு

கொரோனா அச்சம்: மதுரையில் 99 காவலர்களுக்கு ஓய்வு வழங்கி உத்தரவு
கொரோனா அச்சம்: மதுரையில் 99 காவலர்களுக்கு ஓய்வு வழங்கி உத்தரவு
Published on

கொரோனா வைரஸ் தொற்றால் காவலர்கள் உயிரிழக்கும் சம்பவம் அதிகரித்து வருவதால் மதுரையில் பணியாற்றும் 57 வயதிற்கு மேற்பட்ட சுமார் 99 காவலர்களுக்கு ஓய்வு வழங்க காவல்துறை ஆணையர் பிரேம் ஆனந்த் சின்கா உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் கொரோனாவின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், சென்னையை தொடர்ந்து மதுரையிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது. அதைக் கட்டுப்படுத்த மருத்துவர்கள், செவிலியர்கள், காவலர்கள் என முன் களப்பணியாளர்கள் தொடர்ந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

இதனிடையே முன்களப் பணியாளர்களான காவலர்கள், மருத்துவர்கள் கொரோனாவிற்கு உயிரிழக்கும் சம்பவமும் தற்போது அரங்கேறி வருகிறது. விருதுநகரைச் சேர்ந்த முதன்மை காவலர் நேற்று மதுரையில் உள்ள கொரோனா சிறப்பு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது.

இந்த நிலையில் மதுரை மாநகர பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் காவலர்களில் 57 வயதிற்கு மேற்பட்ட மூன்று காவல் ஆய்வாளர்கள், 71 சிறப்பு சார்பு ஆய்வாளர்கள் 22 காவல் உதவி ஆய்வாளர்கள் மூன்று தலைமை காவலர்கள் என மொத்தமாக 99 காவல்துறையினரின் உடல்நலத்தை கருத்தில்கொண்டு அவர்கள் ரயில்வே மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள காவலர்களுக்கான சிறப்பு மருத்துவமனையில் உடல் பரிசோதனை செய்து கொண்டு வீடுகளில் தங்கி ஓய்வெடுக்க மதுரை மாநகர காவல்துறை ஆணையராக புதிதாக பொறுப்பேற்றுள்ள பிரேம் ஆனந்த் சின்ஹா உத்தரவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com