கண்ணகி தோற்றதுடனும், பணமாலை தலையில் கட்சி சின்னம் பொறித்தபடி வந்து வேட்புமனு தாக்கல் செய்தது சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
100 வார்டுகளை கொண்ட மதுரை மாநகராட்சியில் வேட்புமனுத் தாக்கல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் நூதன முறையில் வேட்புமனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர். அந்த வகையில் மதுரை மாநகராட்சி 78-வது வார்டில் (கோவலன் நகர்) மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் 24 வயது எம்பிஏ பட்டதாரி இளம்பெண் மதுமிதா அசோகர், கண்ணகி தோற்றத்தில் கையில் சிலம்புடன் வந்து வேட்புமனு தாக்கல் செய்தார்.
இதேபோல் மாநகராட்சி 68-வது வார்டில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஜாஹீர் உசேன் ஐந்து ரூபாய் நோட்டு மாலையுடன் வேட்பு மனுதாக்கல் செய்ய வந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வாக்காளர்கள் ஓட்டுக்கு பணம் வாங்கக்கூடாது என்பதை வலியுறுத்தி ஐந்து ரூபாய் நோட்டு மாலையுடன் வந்து வேட்புமனு தாக்கல் செய்தார்.
மதுரை மாநகராட்சி 15-வது வார்டுக்கு வேட்புமனு தாக்கல் செய்ய வந்த பாஜக பொறுப்பாளர் கந்தன் என்பவர் தலையில் தாமரை சின்னத்தை வரைந்திருந்தது மக்களின் கவனத்தை ஈர்த்தது.