மதுரை செல்லூர் பகுதியை சேர்ந்த ஐஸ்வர்யாவின் கணவர் காசிமாயன். இவர் மீது கொலை மற்றும் கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், காசிமாயனின் வீட்டிற்கு வந்த செல்லூர் காவல்துறையினர அவரை காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
தனது கணவரை செல்லூர் காவல்நிலையத்தைச் சேர்ந்த தியாகப்பிரியன் அழைத்துச் சென்று பல நாட்கள் ஆன நிலையில் இதுவரை அவரை கண்ணில் காட்டவில்லை எனவும், அவர்மீது பல்வேறு பொய்வழக்குகளை போட்டு சிறையில் அடைத்து வைத்திருப்பதாகவும் தன்னிடம் தவறான முறையில் பேசுவதாகவும் குற்றம்சாட்டினார்.
இதைத்தொடர்ந்து காவல் ஆணையர் அலுவலகத்திற்கு தனது மாமியார் மற்றும் பாட்டியுடன் வந்த ஐஸ்வர்யா திடீரென தான் கொண்டுவந்த மண்ணெண்ணை கோனை எடுத்து தன்மீதும் தனது மாமியார் மற்றும் பாட்டி மீதும் ஊற்றி தீக்குளிக்க முயன்றுள்ளார்.
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் மண்ணெண்ணை கேனை பிடுங்கி அவர்கள் உடலில் தண்ணீர் ஊற்றி தடுத்து நிறுத்தினர். உடனே தங்களை வாழவிடாமல் காவல்துறையினர் தொந்தரவு செய்வதாக கூச்சலிட்டார்.
தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.
சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - +91 44 2464 0050, +91 44 2464 0060)