நாடாளுமன்றத்தில் கேட்குமா தமிழ் இலக்கியவாதிகளின் குரல்கள் ?

நாடாளுமன்றத்தில் கேட்குமா தமிழ் இலக்கியவாதிகளின் குரல்கள் ?
நாடாளுமன்றத்தில் கேட்குமா தமிழ் இலக்கியவாதிகளின் குரல்கள் ?
Published on

நாடாளுமன்றத் தேர்தல் இன்னும் சில வாரங்களில் நடைபெறவுள்ளது. இதனால் தேர்தல் களம் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. அரசியல் கட்சிகள் வேட்பாளர் பட்டியல் அறிவித்து தேர்தலை எதிர்கொள்ள தயாராகிவிட்டனர். தமிழ்நாட்டில் திமுக மற்றும் அதிமுக கூட்டணி தங்களது வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளனர். அந்தப் பட்டியலில் இம்முறை ஒரு சுவராஸ்யமான விஷயம் ஒன்று உள்ளது. 

அது சமூகத்தில் நிலவும் ஏற்றத் தாழ்வுகள், சுரண்டல்கள் , சாதியப் பாகுபாடுகள், பாலின சமத்துவம் , பெண்ணுரிமை, என பல தளங்களிலும் விரிகின்றன இலக்கியவாதிகளின் பணிகள். அரசியலின்றி ஓர் அணுவும் அசையாது என்பதால் எழுத்துக்களின் வாயிலாக மட்டுமின்றி அதிகாரத்தை கையில் எடுப்பதும் அவசியம் என்று மக்களவை தேர்தலில் வேட்பாளர்களாக களமிறங்கியுள்ளனர் சில இலக்கியவாதிகள். 

கருவறை வாசனை, அகத்திணை போன்ற கவிதைத்தொகுப்புகளுக்கு சொந்தக்காரரான கனிமொழியும், வனப்பேச்சி, மஞ்சனத்தி, பேச்சர‌ம் கேட்டிலையோ போன்ற கவிதைத்தொகுப்புகளை எழுதிய தமிழச்சி தங்கபாண்டியனும் திமுக சார்பில் களம் கண்டுள்ளனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சு.வெங்கடேசன் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளராக இருப்பவர். முதல் நாவலான காவல் கோட்டத்திற்காக 2011 ஆம் ஆண்டு சாகித்ய அகாடமி விருது பெற்றவர். சமீபத்தில் வெளியான இவரது வேள்பாரி நாவலுக்கு தனி ரசிகர் பட்டாளமே உருவானது. இவர் கீழடிக்காகவும், களமாடிக்கொண்டிருப்பவர்

இதே போல் , விழுப்புரத்தில் களம் காணும் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி வேட்பாளரும் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினருமான ரவிக்குமார் 20 க்கும் மேற்பட்ட கட்டுரைத் தொகுப்புகள், 7 நூல்களை எழுதியவர். தமிழ் மட்டுமின்றி tamil dalit writing உள்ளிட்ட 4 ஆங்கில நூல்களையும் எழுதியிருக்கிறார். கல்வியில் பின்தங்கிய விழுப்புரத்தை முன்னேற்றும் விருப்பதோடு மக்களவை தேர்தல் களம் கண்டுள்ளார்

மக்களுக்கான உரிமைகளையும், தேவைகளையும் மீட்டுத்தரும் ஜனநாயக அதிகாரத்தை கைப்பற்ற இலக்கியவாதிகள் களமிறங்கியிருப்பது புதிய மாற்றங்களுக்கான வித்தாகும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com