மறைந்த மக்களவை உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மக்களவை 18ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டது.
நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. பின்னர், முன்னாள் மற்றும் தற்போதைய மக்களவை உறுப்பினர்கள் சிலரின் மறைவுக்கு அஞ்சலி தெரிவிக்கும் வகையில் மக்களவை வரும் 18ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டது. முன்னதாக, கூட்டத்தொடரின் முதல் நாளான இன்று பிரதமர் மோடி புதிதாக பதவியேற்ற அமைச்சர்களை இரு அவைகளின் உறுப்பினர்களுக்கும் அறிமுகம் செய்து வைத்தார்.
இதையடுத்து மன்மோகன் சிங் குறித்து விமர்சித்ததற்கு பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும், சரத் யாதவ் தகுதி நீக்க விவகாரத்தில் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் ராஜினாமா செய்ய வேண்டும் எனவும் கூறி காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் உறுப்பினர்கள் கூச்சலிட்டனர். இதனால் மாநிலங்களவையை 2 முறை வெங்கையா நாயுடு ஒத்திவைத்தார்.