ரூபாய் நோட்டு ரத்து நடவடிக்கையைப் போல் புல்லட் ரயில் திட்டமும் எல்லாவற்றையும் கொல்லும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மத்திய அரசை விமர்சித்துள்ளார்.
மும்பை எல்பின்ஸ்டன் ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 22 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து ப.சிதம்பரம் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் தனது கருத்தைத் தெரிவித்துள்ளார். அதில், “ரயில்வே துறையானது பயணிகளின் பாதுகாப்பு, கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்த செலவிட வேண்டும். புல்லட் ரயில் திட்டத்திற்கு அல்ல. புல்லட் ரயில் திட்டம் சாதாரண மக்களுக்கானது அல்ல. மிகப்பெரிய அளவில் வலிமையை காட்டுவதற்கான ஒரு ஈகோ பயணம் தான் அது. புல்லட் ரயில் திட்டத்தை கொண்டு வருமாறு மோடிக்கு பின்னாள் இருந்து யார் அழுத்தம் கொடுத்து வருகிறார். புல்லட் ரயில் திட்டமும் ரூபாய் நோட்டு ரத்து நடவடிக்கையைப் போலத்தான். அது பாதுகாப்பு உட்பட எல்லாவற்றையும் கொல்லும்” என்று கூறியுள்ளார்.