புதிய தலைமுறை மீது வழக்கு : ஜனநாயகத்திற்கு எதிரானது

புதிய தலைமுறை மீது வழக்கு : ஜனநாயகத்திற்கு எதிரானது
புதிய தலைமுறை மீது வழக்கு : ஜனநாயகத்திற்கு எதிரானது
Published on

புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு எதிராக வழக்குப் பதிவு செய்திருப்பது ஜனநாயகத்துக்கு விரோதமானது என மார்க்சிஸ்ட் மற்றும் மனித நேய மக்கள் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

புதிய தலைமுறை தொலைக்காட்சி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பது ஜனநாயகத்திற்கு எதிரானது என வட்டமேசை நிகழ்ச்சியில் பங்கேற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச்செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். அதேபோல, மனித நேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில், வட்டமேசை நிகழ்ச்சி தொடர்பாக புதிய தலைமுறை தொலைக்காட்சி மீதும், அதில் பங்கு கொண்ட இயக்குநர் அமீர் மீதும் வழக்குப் பதிவு செய்திருப்பது ஜனநாயக விரோத நடவடிக்கை என்றும், அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமையை பறிக்கும் பாசிச நடவடிக்கை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மக்களின் மனச்சாட்சியாக திகழும் ஊடகங்களை மிரட்டி, தங்களுக்கு சாதகமாக பணிய வைக்க எடுக்கப்படும் செயலாகவே தெரிகிறது என தமிழ்நாடு பால் முகவர்கள் நலச் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. ஊடக சுதந்திரத்தின் குரல் வளையை நெறிக்கும் வகையில் காவல்துறையினர் நடந்து கொண்டதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் வழக்கை திரும்ப பெற முதலமைச்சர் தலையிட வேண்டும் என்றும் தமிழ்நாடு பால் முகவர்கள் நலச் சங்கம் வலியுறுத்தியுள்ளது. மேலும் புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை திரும்ப பெறவும் வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com