மதுரையில் தன் மகனுக்காக மர சைக்கிள் செய்துகொடுத்து அசத்திய நபருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
மதுரை சம்பங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் சூரியமூர்த்தி. கடந்த 20 ஆண்டுகளாக தச்சு வேலை செய்து வரும் இவரிடம், அவரது 7 வயது மகன் பாரதி, சைக்கிள் வாங்கிக்கேட்டு அடம் பிடித்துள்ளார். உடனே மரத்திலான சைக்கிள் செய்ய முடிவெடுத்து 8 நாட்களில் மர சைக்கிள் ஒன்றை உருவாக்கி அதனை 15 கி.மீ தூரம் வெற்றிகரமாக இயக்கியுள்ளார்.
இந்த மர சைக்கிள் போன்று பலவித மாடல்களில் மரத்திலேயே சைக்கிளை உருவாக்க உள்ளதாகவும் ஆர்வத்துடன் யாரேனும் ஆர்டர் கொடுத்தால் அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ற வகையில் தயார் செய்து கொடுக்க தயாராக உள்ளதாக சூர்யமூர்த்தி தெரிவித்துள்ளார். மரத்தில் சைக்கிள் செய்து அசத்திய சூரியமூர்த்தியை பலரும் பாராட்டி வருகின்றனர்.