கூடலூர்: தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களிடம் கன்னட மொழியில் ஓட்டுகேட்ட அதிமுக வேட்பாளர்

கூடலூர்: தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களிடம் கன்னட மொழியில் ஓட்டுகேட்ட அதிமுக வேட்பாளர்
கூடலூர்: தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களிடம் கன்னட மொழியில் ஓட்டுகேட்ட அதிமுக வேட்பாளர்
Published on

தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களிடம் கன்னட மொழியில் பேசி, அதிமுக வேட்பாளர் பொன்.ஜெயசீலன் வாக்கு சேகரித்தார்.

நீலகிரி மாவட்டம் கூடலூர் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக கட்சியின் சார்பாக வேட்பாளர் பொன். ஜெயசீலன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இன்று அவர் நடுவட்டம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கன்னட மொழி பேசும் மக்கள் அதிகம் வசிக்கும் கிராமங்களுக்குச் சென்று வாக்கு சேகரித்தார்.

அங்குள்ள தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் பேசிய அவர் நானும் தேயிலைத் தோட்டத் தொழிலாளியின் மகன், எனக்கு வாக்களியுங்கள் என கன்னட மொழியிலேயே வாக்கு சேகரித்தார். அவருக்கு கன்னட மொழி தெரியாவிட்டாலும் உள்ளூர் நிர்வாகிகளிடம் கன்னடத்தில் எழுதிக் கொடுக்கச் சொல்லி அதை அப்படியே படித்து கன்னட மொழி பேசும் மக்களிடம் வாக்கு சேகரித்தார்.

தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் அதிகம் வசிக்கும் கூடலூர் சட்டமன்ற தொகுதியில் அவர்களது ஓட்டுக்களை கவர பொன்.ஜெயசீலன் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com