கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்ட அதிமுக பொறுப்பாளர்கள் மாற்றப்பட்டுள்ளனர்.
இதற்கான அறிக்கையை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் இருவரும் கூட்டாக வெளியிட்டுள்ளனர்.
நீக்கமும் நியமனமும்:-
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் கே.ராஜன் நீக்கம். அவருக்கு பதிலாக சேவூர் ராமசந்திரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். வடக்கு மாவட்ட அதிமுக செயலாளராக தூசி கே.மோகன் நியமிக்கப்பட்டுள்ளார்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி காவேரிப்பட்டினம் அதிமுக ஒன்றியக் கழக செயலாளர் பொறுப்பில் இருந்து பிரபாகரன் நீக்கம். அவருக்கு பதிலாக ஏ.கிருஷ்ணன் அந்தப் பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளார்.
அதேபோல் மாவட்ட அதிமுக அவைத் தலைவர் பொறுப்பில் இருந்து அசோக்குமார் விடுவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக அவைத் தலைவராக சைலேஷ் கிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். மாவட்ட அதிமுக செயலாளர் பொறுப்பில் இருந்து கோவிந்தராஜ் விடுவிக்கப்பட்டுள்ளார்.
மேற்கு மாவட்ட அதிமுக செயலாளராக பாலகிருஷ்ண ரெட்டியும் கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளராக அசோக்குமாரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
விழுப்புரம்:
விழுப்புரம் வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர் பொறுப்பில் இருந்து ஆர்.லட்சுமணன் விடுவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக சி.வி.சண்முகம் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மேல்மட்ட பொறுப்புகள்:
அதிமுக அமைப்புச் செயலாளர் பொறுப்பில் இருந்து சி.வி.சண்முகம், சேவூர் ராமச்சந்திரன் விடுக்கப்பட்டுள்ளார். இதற்கு பதிலாக ஆர்.லட்சுமணன் அமைப்புச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
அனைத்துலக எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் பொறுப்பில் இருந்து பேராசிரியர் க.பொன்னுசாமி விடுக்கப்பட்டுள்ளார். அதேபோல் அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளராக பேராசிரியர் க.பொன்னுசாமி நியமிக்கப்பட்டுள்ளார்.
புரட்சித் தலைவி அம்மா பேரவை இணைச் செயலாளராக கண்ணனும் துணைச் செயலாளராக சேது ராமானுஜம் நியமனம்
எம்ஜிஆர் இளைஞர் அணி துணைச் செயலாளராக கருணாகரன் நியமிக்கப்பட்டுள்ளனர்.
5 பேர் கொண்ட குழு
அதிமுக தொண்டர்களிடம் பெறப்படும் மனுக்களை பரிசீலிக்க 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. குழு உறுப்பினர்களாக கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம், நத்தம் விஸ்வநாதன், தங்கமணி, வேலுமணி ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.