திமுக கூட்டணியுடன் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு தொகுதி உடன்பாடு இன்னும் ஏற்படவில்லை என அக்கட்சியின் தலைவர் ஈஸ்வரன் கூறியிருக்கிறார்.
திமுக மூன்று இடங்களை ஒதுக்க முன்வந்த நிலையில், ஏற்கெனவே ஒரு எம்பி சீட் வைத்திருப்பதால் 4 தொகுதிகள் வேண்டும் என கொ.ம.தே.க வலியுறுத்தி வருகிறது. மேலும் தொகுதிகள் குறித்த உத்தேச தொகுதி பட்டியலையும் கொடுத்துள்ளனர். அதில், திருச்செங்கோடு, பொள்ளாச்சி, திருப்பூர் மற்றும் ஈரோடு மேற்கு தொகுதி ஆகியவை இடம்பெற்றுள்ளது.
4 தொகுதிகளை வலியுறுத்துவதால் திமுகவுடனான தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தையில் இன்னும் உடன்பாடு ஏற்படவில்லை என அக்கட்சியின் தலைவர் ஈஸ்வரன் கூறியிருக்கிறார். மேலும் இன்று இரவு நடைபெறவுள்ள ஆட்சிமன்ற குழு கூட்டத்திற்குப் பிறகுதான் அடுத்தக்கட்ட முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.
இதற்குமுன்பு மக்கள் விடுதலைக் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட உள்ளதாக அக்கட்சியின் தலைவர் முருகவேல் ராஜன் தெரிவித்துள்ளார்.