ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் கொல்கத்தா அணி, ராஜஸ்தான் அணிக்கு 192 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் இரண்டாவது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் - கொல்கத்தா அணிகளுக்கிடையே பலப்பரீட்சை நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பவுலிங்கை தேர்வு செய்தது.
இதையடுத்து களம் இறங்கிய கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரரான ரானா டக் அவுட் ஆகி வெளியேறினார். இதையடுத்து திரிபாதியும், சுப்மன் கில்லும் சற்று நிதானமாக ஆடி ஸ்கோரை உயர்த்தினர். ஆனால் அவர்களும் அதிரடியாக விளையாட முற்பட்டு அவுட்டாகினர்.
பின்னர் இறங்கிய நரேன் வழக்கம்போல் நம்பிக்கையை புஷ்வானமாக்கிவிட்டு டக் அவுட்டில் நடையை கட்டினார். ஆனால் அணியின் கேப்டன் மோர்கனும் அதிரடி மன்னன் ரஸலும் ஆட்டத்தை வேறு இடத்திற்கு கொண்டு சென்றனர். ரஸல் 11 பந்துகளில் 25 ரன்கள் குவித்தார். மோர்கன் 33 பந்துகளில் 68 ரன்கள் எடுத்து அணியின் ஸ்கோரை 191 ரன்னாக உயர்த்தினார்.
இதன்மூலம் 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி களமிறங்க உள்ளது.