கொடைக்கானல்: மலைப்பகுதிகளில் மீண்டும் தலைதூக்கும் நெகிழி பயன்பாடு..

கொடைக்கானல்: மலைப்பகுதிகளில் மீண்டும் தலைதூக்கும் நெகிழி பயன்பாடு..
கொடைக்கானல்: மலைப்பகுதிகளில் மீண்டும் தலைதூக்கும் நெகிழி பயன்பாடு..
Published on

கொடைக்கானலில் கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நெகிழி பயன்பாட்டிற்கான தடையை அமல்படுத்தப்பட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் நெகிழி பயன்பாட்டிற்கு முற்றிலும் தடை விதித்து, நெகிழிகளில் அடைத்து விற்கும் பொருட்களையும், நெகிழி தண்ணீர் பாட்டில்களையும் கடைகளில் இருந்து அப்புறப்படுத்த கடந்த மார்ச் மாத இறுதியை இலக்காக நிர்ணயித்து அரசு உத்தரவிட்டது.

ஆனால், அக்காலகட்டத்தில் கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால். நெகிழி விஷயத்தில் அரசு கவனம் செலுத்தாமல் நோய்தொற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்து பணியாற்றியது. தற்பொழுது 90 சதவீதம் ஊரடங்கு தளர்த்தப்பட்டு, சுற்றுலாபயணிகள் மலைப்பகுதிகளுக்குள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், மீண்டும் நெகிழி பயன்பாடு அதிகரிக்கத் துவங்கியுள்ளதாகவும், இதனால் மீண்டும் நீர் நிலைகள் மற்றும் குப்பைத்தொட்டிகளில் நெகிழி குப்பைகள் நிறைய வாய்ப்புள்ளதாகவும், ஆகையால் நெகிழி பயன்பாட்டிற்கு விதிக்கப்பட்ட தடையை உடனடியாக செயல்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இது குறித்து உதவிஆட்சியர் சிவகுரு பிரபாகரனிடம் கேட்டபோது நெகிழி தொடர்பான அரசின் உத்தரவை அமல்படுத்த ஆலோசனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com