கொடைக்கானல்: நீதிமன்ற உத்தரவை மீறி படகுகுழாமை முறைகேடாக திறக்க முயற்சி என புகார்!

கொடைக்கானல்: நீதிமன்ற உத்தரவை மீறி படகுகுழாமை முறைகேடாக திறக்க முயற்சி என புகார்!
கொடைக்கானல்: நீதிமன்ற உத்தரவை மீறி படகுகுழாமை முறைகேடாக திறக்க முயற்சி என புகார்!
Published on

கொடைக்கானலில் தனியார் படகு குழாமை பூட்டி சீல்வைத்த நீதிமன்ற உத்தரவை மறைத்து மீண்டும் முறைகேடாக திறக்க முயற்சிப்பதாக புகார் எழுந்துள்ளது. 


திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் ஏரியில், சுமார் 99 ஆண்டுகளாக தனியார் படகு குழாம் மூலம் சுற்றுலா பயணிகளுக்கு படகுகளை வாடகைக்கு விட்டு அதன்வழியாக பலகோடி ரூபாய் வருவாயை ஈட்டியுள்ளதாகவும், அதில் அரசுக்கு சேரவேண்டிய தொகையை தராமல், போக்கு காட்டியதாகவும் கடந்த ஆண்டு, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஆரோக்கியசாமி என்பவர் மனு செய்துதார்.


அதில் அரசுக்கு சேர வேண்டிய தொகையை வசூல்செய்ய வேண்டும் எனவும், ஏரியில் உள்ள தனியார் படகு குழாமை, நகராட்சியே எடுத்து நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார். அதனை விசாரித்த நீதிமன்றம் முறைகேடு இருப்பதற்கான முகாந்திரம் உள்ளதாக அந்த தனியார் படகுகுழாமை மூடி சீல்வைக்க உத்தரவிட்டது.


அதன் பின்னர் தற்பொழுதுள்ள தனியார் படகு சங்க நிர்வாகிகள் பூட்டப்பட்டுள்ள படகுகுழாம் மீது நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும்போதே, மீண்டும் படகு விடுவதற்கான உரிமையை நீட்டிக்க, தலைமைச் செயலகத்திற்குச் சென்று உத்தரவு பெற்று, படகு குழாமை திறக்க முயற்சிப்பதாக குற்றம் சாட்டியுள்ள ஏரி மீட்புக்குழு அமைப்பினர். இது குறித்து நகராட்சி ஆணையர் நாராயணனிடம் புகார் மனு அளித்துள்ளனர்.


அதில் தனியார் படகுகுழாம் மீது நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள போது படகுகுழாமை திறக்கக் கூடாது. மீறி திறந்தால் அது நீதிமன்ற அவமதிப்பு எனவும் அம்மனுவில் குறிப்பிட்டு, அவர்கள் நடவடிக்கைக்கு நாகராட்சி அதிகாரிகள் உடந்தையாக செயல்பட வேண்டாம் என்று வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com