எந்தவித முன்னேற்பாடும் இன்றி எப்படி துறைமுக மேம்பாட்டு திட்டத்தை தொடங்க முடியும் என ஆளுநர் கிரண்பேடி கேள்வி எழுப்பியுள்ளார்.
புதுச்சேரியில் துறைமுக பணிகள் குறித்து அவ்வப்போது ஆளுநர் கிரண்பேடி விமர்சித்து வந்தார். இந்நிலையில் துறைமுக மேம்பாட்டு திட்டம் குறித்து சமூக வலைதளங்களில் பல கேள்விகளை எழுப்பியுள்ளார் ஆளுநர் கிரண்பேடி.
1. இந்த துறைமுக மேம்பாட்டு திட்டத்தை செயல்படுத்துவதற்கு புதுச்சேரி அரசு சரியான முன் ஏற்பாடுகள் எதுவும் செய்யாத போது இவ்வளவு பெரிய திட்டத்தை எப்படி தொடங்க முடியும்?
2. துறைமுகத்தில் கையாளப்படும் சரக்குகளை வெளியே கொண்டு செல்வதற்கு புறவழிச்சாலை ஏன் இதுவரை செயல்படுத்தப்படவில்லை?
3. சரக்குகளை ஏற்றி செல்லும் லாரிகளுக்கு போதிய பாதை வசதி உள்ளதா?
4. சரக்கு கையாளும் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் காவலர்கள் பயன்படுத்தும் கண்காணிப்பு கேமராக்கள் ஆகியவற்றிற்கு கட்டுப்பாட்டு அறை எங்கே ?
5. சரக்குகளை துறைமுகத்திற்குக் கொண்டு செல்லும் பைபாஸ் சாலை திட்டத்தின் நிலை என்ன?
6. புதிய துறைமுக பகுதியில் இதற்கான அடையாள பலகைகள் வைக்கப்பட்டுள்ளதா?
என புதுச்சேரி அரசுக்கு துணை ஆளுநர் ஏராளமான கேள்விகளை கேட்டுள்ளார். துணை நிலை ஆளுநருக்கும், புதுச்சேரி அரசுக்கும் இடையே தொடர்ந்து மோதல் நிகழ்ந்து வருவதால், அங்கு அரசு திட்டங்கள் பல பாதிக்கப்பட்டு வருவதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.