“உங்களுக்கு பதிலாக கரூரில் சின்னத்தம்பியா?” - தம்பிதுரை பதில்

“உங்களுக்கு பதிலாக கரூரில் சின்னத்தம்பியா?” - தம்பிதுரை பதில்
“உங்களுக்கு பதிலாக கரூரில் சின்னத்தம்பியா?” - தம்பிதுரை பதில்
Published on

ஜனநாயக நாட்டில் தேர்தலில் போட்டியிட அனைவருக்கும் உரிமை உண்டு என்று கரூர் மக்களவை தொகுதி எம்.பியான தம்பிதுரை கூறியுள்ளார். 

அதிமுக சார்பில் மக்களவை தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளிப்பதற்கான அவகாசம் இன்றுடன் நிறைவு பெற்றது. அமைச்சர்களின் வாரிசுகள் உட்பட 1,737 பேரிடம் விருப்ப மனுக்கள் பெறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில், தம்பிதுரை எம்.பி.யாக உள்ள கரூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் தந்தை சின்னத்தம்பி மனுத் தாக்கல் செய்துள்ளார். 

இந்நிலையில், விஜயபாஸ்கரின் தந்தை விருப்ப மனு அளித்துள்ளது குறித்த கேள்விக்கு பதில் அளித்த தம்பிதுரை, ஜனநாயக நாட்டில் தேர்தலில் போட்டியிட அனைவருக்கும் உரிமை உண்டு என்று கூறியுள்ளார். 

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தம்பிதுரை, “யார் உரிமையையும், யாரும் தட்டிப் பறிக்க முடியாது. நாடாளுமன்றத்தில் பாஜகவை குற்றம்சாட்டி பேசியது கூட ஜெயலலிதா விருப்பங்களை நிறைவேற்றவே. கூட்டணி தொடர்பாக கட்சி தலைமைதான் முடிவு எடுக்கும்” என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com