மும்மொழிக் கொள்கை மோசடிக் கொள்கை. இருமொழிக் கொள்கை ஏமாற்றுக் கொள்கை என திருவாடானை தொகுதி எம்.எல்.ஏ கருணாஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மும்மொழிக்கொள்கை வேதனை அளிப்பதாக மத்திய அரசின் சதிகார போக்கை முதல்வர் கண்டித்துள்ளார். அதை வரவேற்கிறேன். அதேசமயம் தமிழக அரசு அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி மத்திய அரசுக்கு கூடுதல் அழுத்தம் கொடுக்க வேண்டும்.
மும்மொழி திட்டத்தை ஒருபோதும் நாம் ஏற்றுக்கொள்ள முடியாது. மும்மொழிக் கொள்கை மோசடிக் கொள்கை. இருமொழிக்கொள்கை ஏமாற்று கொள்கை. ஒருமொழிக்கொள்கையே உரிமைக்கொள்கை என்பதை எதிர்காலத்தில் நாம் நிலை நிறுத்த வேண்டும். அந்த ஒருமொழிக்கொள்கையான தமிழை நாம் உயர்த்தி பிடிக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.