கண்டிப்பாக வாக்களியுங்கள் என்று பிரசாரம் செய்யும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட்டின் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது, அதிர்ச்சியளித்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட். இந்திய கிரிக்கெட் அணியுன் சுவர் என வர்ணிக்கப்படும் இவர், இப்போது இந்திய இளம் அணிக்கு பயிற்சியாளராக இருக்கிறார்.
பெங்களுரில் வசிக்கும் ராகுல் டிராவிட்டை, கர்நாடக மாநில தேர்தல் ஆணையம் தூதராக நியமித்துள்ளது. இதையடுத்து அதன் விளம்பரங்களி ல், ’கண்டிப்பாக வாக்களியுங்கள், அதன் மூலம் ஜனநாயகத்தை வெற்றி பெற செய்யுங்கள்’ என்று கூறி வருகிறார் டிராவிட். போஸ்டர்களில் ப ளிச்சென்று சிரித்தபடி இதே வாசகத்தைச் சொல்கிறார். எல்லாரையும் வாக்களிக்கச் சொல்லும் டிராவிட்டால் இந்த தேர்தலில் வாக்களிக்க முடி யாது என்பதுதான் சோகம். வாக்காளர் பட்டியலில் அவர் பெயர் மிஸ்சிங்!
பெங்களூரு மத்திய மக்களவைத் தொகுதியில் உள்ள இந்திரா நகரில் இருக்கிறது டிராவிட்டின் வீடு. ஒவ்வொரு தேர்தலிலும் மறக்காமல் வாக் களித்துவிடுவார் டிராவிட். இதையடுத்துதான் அவரை தேர்தல் ஆணையம் தூதராக நியமித்தது. ஆனால், அவராலேயே வாக்களிக்க முடியாது என்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்திருக்கிறது மாநில தேர்தல் ஆணையம்.
இதுபற்றி தேர்தல் அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘’ராகுல் டிராவிட், தனது மனைவியுடன் அதே பகுதியில் வேறு வீட்டுக்கு குடியேறிவிட்டார். இதனால், அவர் குடும்பத்தினருக்கான வீட்டு முகவரியில் இருந்து அவர் பெயரை நீக்கிவிடும்படி, ராகுல் டிராவிட்டின் தம்பி விஜய், தேர்தல் அலுவலகத்தில் விண்ணப்பம் 6 ஐ சமர்ப்பித்துள்ளார். அதன்படி ராகுல் டிராவிட் பெயர் நீக்கப்பட்டது. ஆனால், ராகுல் டிராவிட், புதிய முகவரியி ல் தனது பெயரை சேர்ப்பதற்கான விண்ணப்பம் 7 ஐ சமர்ப்பிக்கவில்லை என்பதால் வாக்காளர் பட்டியலில் அவர் பெயர் இடம்பெறவில்லை’’ என்றார்.
ஆனால், ராகுல் டிராவிட்டின் தம்பி விஜய் இதை மறுத்துள்ளார். ‘’டிராவிட் சார்பாக ஃபார்ம் 7, உதவி தேர்தல் அதிகாரியிடம் சமர்பிக்கப்பட்டது. ஆனால், அதற்கு பிறகு என்ன நடந்தது என்பது பற்றி எனக்குத் தெரியவில்லை’’ என்று அவர் கூறியுள்ளார்.