தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியை நான் ஏன் தேர்ந்தெடுத்தேன்? - கனிமொழி விளக்கம்

தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியை நான் ஏன் தேர்ந்தெடுத்தேன்? - கனிமொழி விளக்கம்
தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியை நான் ஏன் தேர்ந்தெடுத்தேன்? - கனிமொழி விளக்கம்
Published on

தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியை தேர்தெடுத்தது ஏன் என அந்த தொகுதியில் திமுக வேட்பாளராக களமிறங்கியுள்ள கனிமொழி விளக்கம் அளித்துள்ளார்.

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் மற்றும் 18 தொகுதி பேரவை இடைத்தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெறுகிறது. அதிமுக, திமுக ஆகிய கட்சிகள் தீவிரமாக பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன. தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் திமுக வேட்பாளராக கனிமொழி களம் காண்கிறார். இந்நிலையில், தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியை தேர்தெடுத்தது ஏன் என கனிமொழி விளக்கம் அளித்துள்ளார்.

இதுகுறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் கனிமொழி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,  “என் தாய் 5 ஆண்டுகளுக்கு முன்னால் பிரதம மந்திரி கிராமத்தை தத்தெடுக்கக்கூடிய திட்டத்தின் கீழ் நான் இந்த பகுதியிலே இருக்கக்கூடிய வெங்கடேஷபுரம் என்ற கிராமத்தை தத்தெடுத்திருக்கிறேன். அதன்பிறகு என்னுடைய எம்.பி நிதியிலிருந்து பல திட்டங்களுக்கான நிதியையும் அளித்திருக்கிறேன். தொடர்ந்து இங்கே வரக்கூடிய வாய்ப்பை பெற்றதாலும் அங்கு கிராமப்புற சபைகளுக்கும் ஊராட்சி கூட்டங்களுக்கு வரக்கூடிய வாய்ப்பை திமுக அளித்ததாலும் இங்கு இருக்க கூடிய சூழ்நிலைகளை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.

இங்கே பல வாய்ப்புகள் இருக்கிறது. ஆனால் அதை சரியாக பயன்படுத்தி கொள்ள முடியாத சூழலை இங்கே இருக்க கூடிய அதிமுக அரசு உருவாக்கி வைத்திருக்கிறது. கிராமப்புறங்களில் அடிப்படை வசதிகள் இல்லை. தொழில்வளர்ச்சி இல்லை. வேலை வாய்ப்பு இல்லை என்ற சூழலை கண்கூடாக பார்க்க முடிந்தது. அதனால் இந்த பகுதிக்கு என்னால் ஆன முயற்ச்சிகளை மேற்கொண்டு ஒரு வளர்ச்சியை கொண்டு வரவேண்டும் என்பதற்காகத்தான் இந்த தொகுதியை தேர்வு செய்தேன். இதை திமுக தலைவரிடம் கூறியபோது அவர் இந்த தொகுதியில் போட்டியிடுவதற்கான வாய்ப்பை அளித்திருக்கிறார்கள். அவர்களுக்கும் திமுகவுக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.” என தெரிவித்துள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com