உள்ளாட்சி தேர்தலை ஒட்டி தென்காசி மாவட்டத்தில் தேர்தல் பரப்புரையை இன்று திமுக மாநில மகளிர் அணி செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி மேற்கொண்டார்.
தென்காசி மாவட்டம் செங்கோட்டை நகராட்சி, ஆய்க்குடி பேரூராட்சி, சாம்பவர் வடகரை பேருராட்சி, கடையநல்லூர நகராட்சி, புளியஙகுடி நகராட்சி, சங்கரன் கோவில் நகராட்சி பகுதிகளில் இன்று பரப்புரை மேற்கொண்டு வருகிறார். முன்னதாக செங்கோட்டையில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு வாக்கு கேட்டு தாலுகா கார்னர் அருகே பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், உள்ளாடையிலும் நல்லாட்சி தொடரவும் முதல்வரிடம் இருந்து சலுகை பெற்றுத்தர பாலமாக செயல்பட உள்ள திமுகவினருக்கு வாக்களிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
திமுகவைத் தோற்றுவித்த அறிஞர் அண்ணா மாநில சுயாட்சிக்காக தொடர்ந்து குரல் அளித்தவர். ’நாட்டுக்கு எதுக்கு கவர்னர்’ என்ற தொடர் முழக்கத்தில் நாமும் உள்ள நிலையில் அண்ணாவின் பெயரைக்கொண்டு கட்சி நடத்தும் அதிமுக, மாநில உரிமையை முழங்கிய அண்ணாவின் பெயரை உங்கள் கட்சியில் இருந்து எடுத்துவிடுங்கள் என்று கூறுகிறது. அண்ணாவின் பெயரில் கட்சி நடத்தும் எடப்பாடி பழனிசாமி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை ஆளுநர் என்ற பூச்சாண்டியைக் காட்டி மிரட்டும் தொனியில் பேசி வருகிறார்.
ஒன்றிய அரசும் ஆளுநரும் சேர்த்து ஆடும் ஆட்டத்திற்குப் பணிவிடை செய்வதுதான் இன்றைய அதிமுகவின் நிலைமை. வாக்குறுதியை பற்றி இவர்கள் பேசலாமா??? சட்டசபையில் 110 அறிக்கையின் கீழ் அறிவித்த திட்டங்களே காற்றில் மிதக்கின்றன எனப் பேசினார்.