நியாயம், நீதி வென்றிருக்கிறது: கனிமொழி பேட்டி

நியாயம், நீதி வென்றிருக்கிறது: கனிமொழி பேட்டி
நியாயம், நீதி வென்றிருக்கிறது: கனிமொழி பேட்டி
Published on

நியாயம், நீதி வென்றிருக்கிறது என 2ஜி வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ள கனிமொழி தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு வழக்கில் ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். குற்றச்சாட்டுகளை சந்தேகத்திற்கு இடமின்றி  நிரூபிக்க சிபிஐ தவறிவிட்டதால் ஆ.ராசா உள்ளிட்ட குற்றம்சாட்டப்பட்ட 14 பேரையும் விடுவிப்பதாக நீதிபதி அறிவித்துள்ளார்.

இந்நிலையில் தீர்ப்பு குறித்து புதிய தலைமுறைக்கு பேட்டியளித்த கனிமொழி, “ மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. நியாயம், நீதி வென்றிருக்கிறது. 7 வருட போராட்டத்திற்கு பிறகு நியாயம் கிடைத்திருக்கிறது. எப்படியானாலும் வழக்கு ஒரு பெரிய அழுத்தமாகத் தான் இருந்துவந்தது. அதுவும் இன்று தூக்கி எறியப்பட்டு மகிழ்ச்சியாக இருக்கிறது. இனி நீதிமன்றத்திற்கு செல்லவேண்டிய அவசியம் இல்லை. அதனால் அதிக நேரம் அரசியலில் செலவிட முடியும். இது ஒரு பொய் வழக்கு என திமுக தொடர்ச்சியாக சொல்லி வந்தது. எந்தவித அடிப்படை ஆதாரமும் இல்லாமல் வழக்கு பதிவு செய்யப்பட்டதால், கடந்த 7 ஆண்டுகளாக பல அவமானங்கள், பிரச்னைகளை சந்திக்க வேண்டியிருந்தது. இது எல்லாவற்றிற்கும் ஒரு நியாயம் கிடைத்திருக்கிறது. நிச்சயமாக மேல்முறையீட்டையும் எதிர்கொள்வோம் ” என தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com