அனைத்துக்கட்சி கூட்டம் எப்போ ? அறியாத கமல்ஹாசன்..
காவிர் விவகாரத்தில் தமிழக அரசு இன்று அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டியது. காலை 10.30 மணிக்கு இந்தக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. கூட்டத்தில் கலந்துக் கொள்ள அனைத்து கட்சிகளுக்கும், விவசாய சங்கங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. முதலமைச்சர் பழனிசாமியும் , துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் கூட்டத்திற்கு தலைமை வகித்துள்ளனர்.
கூட்டத்தில் கலந்து கொள்ள இருப்பவர்களுக்கு ஏற்கெனவே அழைப்பிதழ்கள் அனுப்பப்பட்டு , யார் யார் கூட்டத்தில் கலந்து கொள்வார்கள் என்ற பட்டியல் தயாரிக்கப்பட்டு நேற்றே இறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் மதுரையில் இன்று காலை 11 மணியளவில் செய்தியாளர்களைச் சந்தித்த கமல்ஹாசன், தமிழக அரசு காவிரி விவகாரத்தில் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டியிருப்பதாகவும் , அதில் கலந்துக் கொள்ள அனுமதித்தால் கலந்து கொள்வேன் என்றும் கூறினார். அதோடு ஒருவேளை அனுமதி இல்லையென்றால் மீண்டும் கட்சிப்பணிகளை தொடர்வேன் என்றும் கூறினார்.
அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்படும், காவிரி பிரச்னை என்பதால் விவசாய சங்கங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ.வான தினகரனுக்கும் கட்சி இல்லாததால் அழைப்பு விடுக்கப்படவில்லை. இந்நிலையில் ஏறக்குறைய அனைத்துக் கட்சி கூட்டம் முடிவடைந்த நிலையில், அழைக்காமல் , ஆரம்பித்து நடைபெற்று முடிய உள்ள கூட்டத்திற்கு சென்னை செல்கிறேன் என்று தெரிவித்தார் கமல்ஹாசன்..