பிரச்சனைகளை பேச கமல் அறிமுகம் செய்த செயலி 'மய்யம் விசில்'

பிரச்சனைகளை பேச கமல் அறிமுகம் செய்த செயலி 'மய்யம் விசில்'
பிரச்சனைகளை பேச கமல் அறிமுகம் செய்த செயலி 'மய்யம் விசில்'
Published on

பிரச்னைகளைப் பற்றிப் பேச கமல்ஹாசன் மய்யம் விசில் (maiamwhistle) என்ற செயலியை அறிமுகப்படுத்தினார்.

கமல்ஹாசனின் 63-வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை தி.நகரில் நற்பணி மன்றம் சார்பில் புதிய செயலி அறிமுக விழா நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய கமல், “மக்கள் பிரச்னைகளை தெரிந்து கொள்வதற்காக தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய திட்டமிட்டிருக்கிறேன். நான் சுற்றுப்பயணம் செய்து கொள்வது கற்றுக் கொள்வதற்காகத் தான். நல்ல தமிழ்நாட்டை உருவாக்குவது எனது கனவு. நல்லது செய்வதையும் பண்பறிந்து, ஜாக்கிரதையாக செய்ய வேண்டும்” என்று கூறினார். 

இந்த நிகழ்ச்சியில் கமல்  maiamwhistle என்ற செயலியை அறிமுகப்படுத்தி வைத்தார். இது வெறும் ஆப் அல்ல ஒரு பொது அரங்கம் என்றும் அவர் கூறினார். இந்தச் செயலியின் மூலம் தன்னைப் பற்றிய குறைபாடுகள் இருந்தாலும் சொல்லலாம் என்றும் அவர் கூறினார். 

மேலும், மக்கள் பிரச்னைகளை பற்றிப் பேச #theditheerpomvaa #maiamwhistle #virtuouscycles என்ற ஹேஷ்டேக்குகளை கமல் அறிமுகம் செய்தார். இந்த ஹேஷ்டேக்குகளில் மக்கள் பிரச்னைகளைப் பேசலாம் என்று கூறிய கமல் தான் ஏதாவது தவறு செய்தால் அது குறித்தும் பேசலாம் என்றும் கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com