ரஜினியுடன் கமல் திடீர் சந்திப்பு

ரஜினியுடன் கமல் திடீர் சந்திப்பு
ரஜினியுடன் கமல் திடீர் சந்திப்பு
Published on

கமல்ஹாசன் தனது அரசியல் கட்சியை தொடங்கி, சுற்றுப் பயணம் மேற்கொள்ள இருக்கும் நிலையில், ரஜினிகாந்தை அவர் இல்லத்தில் சந்தித்து பேசினார்.

நடிகர் கமல்ஹாசன் பிப்ரவரி 21ஆம் தேதி தனது அரசியல் சுற்றுப் பயணத்தை தொடங்கவுள்ளார். ஏற்கனவே தமிழகத்தின் சிஸ்டம் சரியில்லை என்று கூறி, ரஜினிகாந்தும் அரசியல் கட்சி தொடங்கவுள்ளார். அதற்கான முதல் கட்டப் பணியாக ரஜினி மன்றத்துக்கான நிர்வாகிகளை மாவட்ட வாரியாக நியமித்து வருகிறார். கமல்ஹாசன் கடந்த சில நாள்களாகவே தமிழகத்தின் முக்கிய பிரமுகர்களை சந்தித்து அரசியல் ஆலோசனை பெற்று வருகிறார். குறிப்பாக முன்னால் தேர்தல் அதிகாரி டி.என்.சேஷன், கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணு ஆகியோரை சந்தித்து வந்தார்.

இந்நிலையில் இன்று பிற்பகல் ரஜினிகாந்தின் போயஸ் தோட்ட இல்லத்தில் கமல்ஹாசன் சந்தித்து பேசினார். இரு நடிகரும் வெவ்வேறு கொள்கைகள் கொண்டவர்களாக இருந்தாலும், அரசியல் களத்தில் இருவரும் ஒரே சமயத்தில் கால் பதிக்க இருக்கின்றனர். ஏற்கெனவே, அரசியல் களத்தில் ரஜினியும், கமலும் இணைந்து பணியாற்றுவார்களா என்ற எதிர்பார்ப்பு இருக்கும் சூழலில், இன்றைய சந்திப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சந்திப்பு குறித்து பேசிய கமலஹாசன்: “நான் ஒரு பெரும் பயணம் மேற்கொள்ள உள்ளேன். அது குறித்து மனதிற்கு பிடித்தவர்களிடம் சொல்வதற்காக ரஜினியை சந்தித்தேன். ரஜினியை இன்று சந்தித்தது, நட்ப ரீதியலானது. அரசியல் குறித்து பேசவில்லை.” என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com