வந்தவாசியில் தேர்தல் பிரச்சாரம் செய்ய வந்த காடுவெட்டி குரு மகள் வாகனத்தை மடக்கிய பாமகவினர் தகராறில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
வந்தவாசி (தனி) சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளர் அம்பேத்குமாரை ஆதரித்து வந்தவாசி தேரடியில் மறைந்த வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குரு மகள் விருதாம்பிகை தேர்தல் பிரச்சாரம் செய்தார். தேர்தல் பிரச்சாரத்தை முடித்து விட்டு வந்தவாசி பஜார் வீதியில் பிரச்சாரம் மேற்கொள்ள வந்தார்.
அப்போது பாட்டாளி மக்கள் கட்சியை சேர்ந்த சிலர் பஜார் வீதியில் காடுவெட்டி குரு மகள் விருதாம்பிகை மற்றும் திமுக வேட்பாளர் அம்பேத்குமார் சென்ற வாகனத்தை தடுத்து நிறுத்தி எப்படி எங்கள் பாமக தலைவரை பற்றி அவதூராக பேசலாம் என்று தகராறு செய்தார். உடனடியாக அங்கு வந்த போலீசார் தகராறு செய்த வாலிபர்களை காவல்நிலையம் அழைத்துச் சென்றனர்.
பின்னர் விருத்தாம்பிகை திமுக வேட்பாளர் அம்பேத்குமார் மற்றும் கூட்டணிக் கட்சியினருடன் பஜார் வீதியில் வாக்கு சேகரித்தார். இதனால் பஜார் வீதியில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.