இறைச்சிக்காக மாடுகள் விற்க தடை எனபது இந்துத்துவா கொள்கையை மத்திய அரசு புகுத்தி இந்துத்துவா ஆட்சியை கொண்டு வர முயற்சிக்கிறது என்று இதை எதிர்த்து வரும் 1 ஆம் தேதி போராட்டம் நடத்தப்படும் என்றும் கூறினார்.
திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி திருச்சியில் செய்தியாளர்களிடன் கூறியதாவது, மத்திய அரசு இறைச்சிக்காக மாடுகளை விற்க தடை விதித்துள்ளது கண்டிக்கத்தக்கது. மாட்டிறைச்சி உண்ணும் பழக்கம் அனைவருக்கும் உள்ளது. மாநில அரசுகளை கலந்து ஆலோசிக்காமல் இந்துத்துவா கொள்கையை மத்திய அரசு புகுத்தி இந்துத்துவா ஆட்சியை கொண்டு வர முயற்சிக்கிறது.
மாட்டிறைச்சி தடையை கண்டித்து வருகிற 1 ஆம் தேதி சென்னையில் ஜனநாயக உரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் போராட்டம் நடத்தப்படும். ஒத்த கருத்துள்ள அனைவரும் இதில் பங்கேற்க வேண்டும் என்று கி.வீரமணி கூறினார்.
மேலும் இன்று சென்னையில் பாஜக அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற இந்திய தேசிய லீக் கட்சியினர் கைது செய்யப்பட்டனர். இறைச்சிக்காக மாடுவிற்க தடைவிதித்த மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்திய தேசிய லீக் கட்சி தலைவர் தடா ரஹீம் உள்பட 50 பேரை போலீசார் கைது செய்தனர்.