“தமிழ்நாட்டில் ராகுல்காந்தி போட்டியிட வேண்டும்” - கே.எஸ்.அழகிரி

“தமிழ்நாட்டில் ராகுல்காந்தி போட்டியிட வேண்டும்” - கே.எஸ்.அழகிரி
“தமிழ்நாட்டில் ராகுல்காந்தி போட்டியிட வேண்டும்” - கே.எஸ்.அழகிரி
Published on

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மக்களவைத் தேர்தலில் தமிழகத்தின் ஒரு தொகுதியில் போட்டியிட வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கோரிக்கை விடுத்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேர்தல் தேதியை கடந்த 10 ஆம் தேதி தேர்தல் ஆணையம் அறிவித்தது. தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 18 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. 

தமிழகத்தில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், ம.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய ஜனநாயகக் கட்சி ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன. அந்தக் கூட்டணியில், கட்சிகளுக்கு இடையிலான தொகுதி ஒதுக்கீடும் நிறைவடைந்தது. 

அதன்படி மக்களவைத் தேர்தலில் திமுக 20 தொகுதிகளிலும், காங்கிரஸ் 10 தொகுதிகளிளும் போட்டியிடுகிறது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகியவற்றுக்கு தலா 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மதிமுக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், ஐஜேகே, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆகியவற்றுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளன. புதுச்சேரி, சிவகங்கை, கன்னியாகுமரி, விருதுநகர், தேனி, திருச்சி, கரூர், கிஷ்ணகிரி, திருவள்ளூர்,ஆரணி ஆகிய 10 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடுகிறது.

இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மக்களவைத் தேர்தலில் தமிழகத்தின் ஒரு தொகுதியில் போட்டியிட வேண்டும் எனத் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தியாவின் அனைத்து தரப்பு மக்களும் ஏற்றுகொள்ள கூடிய தலைவராக ராகுல் காந்தி விளங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதனால் உத்திரப்பிரதேசத்தில் ராகுல்காந்தி போட்டியிடுவது போல மக்களவைத் தேர்தலில் தமிழகத்தின் ஒரு தொகுதியில் போட்டியிட வேண்டும் எனவும் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com