ஜெயலலிதா மரணம்: விசாரணை ஆணையம் முன் கிருஷ்ணப்ரியா ஆஜர்

ஜெயலலிதா மரணம்: விசாரணை ஆணையம் முன் கிருஷ்ணப்ரியா ஆஜர்
ஜெயலலிதா மரணம்: விசாரணை ஆணையம் முன் கிருஷ்ணப்ரியா ஆஜர்
Published on

ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையத்தில் இளவரசி மகள் கிருஷ்ணப்ரியா ஆஜராகியுள்ளார்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம், தனது விசாரணையை நடத்தி வருகிறது. இந்த ஆணையத்தில் பல்வேறு தரப்பினர் ஆஜராகி தங்களுக்கு தெரிந்த தகவல்களை அளித்து வருகின்றனர்.

இதனிடையே, ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் டிடிவி தினகரன், இளவரசியின் மகள் கிருஷ்ணப்ரியா, ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் ஆகியோருக்கு கடந்த 27-ம் தேதி  சம்மன் அனுப்பியிருந்தது. அனை‌வரும் 7 நாட்களுக்குள் ஜெயலலிதா மரணம் தொடர்பாக தங்க‌ளிடம் உள்ள ஆவணங்கள்‌ மற்றும் ஆதாரங்களை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில் விசாரணை ஆணையத்தின் முன் இளவரசி மகள் கிருஷ்ணப்ரியா இன்று ஆஜராகியுள்ளார். அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com