அமித்ஷா மகன் சொத்து விவகாரம்: செய்தி வெளியிட்ட நிறுவனத்திற்கு குஜராத் நீதிமன்றம் சம்மன்

அமித்ஷா மகன் சொத்து விவகாரம்: செய்தி வெளியிட்ட நிறுவனத்திற்கு குஜராத் நீதிமன்றம் சம்மன்
அமித்ஷா மகன் சொத்து விவகாரம்: செய்தி வெளியிட்ட நிறுவனத்திற்கு குஜராத் நீதிமன்றம் சம்மன்
Published on

பாரதிய ஜனதா கட்சித் தலைவர் அமித்ஷாவின் மகன் ஜெய்ஷா நிறுவனத்தின் சொத்து மதிப்பு குறித்து செய்தி வெளியிட்ட இணையதள செய்தி நிறுவனத்திற்கு குஜராத் நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.

இது குறித்து தி வையர் என்ற ஆங்கில இணையதளம் வெளியிட்ட செய்தியில், '' மோடி பிரதமராக பதவியேற்றபின், ஜெய் ஷாவிற்கு சொந்தமான 'டெம்பிள் என்டர்பிரைசஸ்' என்ற நிறுவனத்தின் சொத்து மதிப்பு 16 ஆயிரம் மடங்கு உயர்ந்துள்ளதாக” கூறியிருந்தது. 

இந்த செய்தியை எதிர்த்து ஜெய் ஷா தரப்பில்  குஜராத் மெட்ரோபாலிடன் நீதிமன்றத்தில் 100 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு வழக்கு தொடரப்பட்டது. இந்த நிலையில் மனுவை விசாரித்த நீதிமன்றம் வையர் நிறுவனத்திற்கு சம்மன் அனுப்பியுள்ளது. அதில், நவம்பர் 13-ம் தேதிக்கும் நிறுவனத்தி ரிப்போர்டர் மற்றும் செய்தி ஆசிரியர் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com