தேர்தல் ஆணையத்தில் நடைபெற்ற இரட்டை இலை சின்னம் தொடர்பான விசாரணையை ஜெ.தீபா பேரவையினர் புறக்கணித்து வெளியேறினர்.
டெல்லி உள்ள தலைமை தேர்தல் ஆணையத்தில் இரட்டை இலை சின்னம் தொடர்பான விசாரணை நடைபெற்றது. இதில் ஈ.பி.எஸ்.ஓ.பி.எஸ் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் முகுல் ரோஹத்கி, சி.எஸ்.வைத்தியநாதன், விஜயகுமார், குரு கிருஷ்ணகுமார் ஆகியோர் ஆஜராகினர். தினகரன் தரப்பில் வழக்கறிஞர் விஜய் ஹன்சாரியா உள்ளிட்டோர் ஆஜராகினர். இருதரப்பும் இரட்டை இலை சின்னத்திற்காக கடுமையாக வாதிட்டன. அப்போது வாதத்தை புறக்கணித்த ஜெ.தீபா பேரவையினர், அங்கிருந்து அதிருப்தியுடன் வெளியேறினர். பின்னர் நடைபெற்ற இரு தரப்பு வாதத்தையும் கேட்ட தேர்தல் ஆணையும், விசாரணையை வரும் 13ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.