டாஸ் வென்ற ஐதராபாத் அணி பவுலிங் தேர்வு - இரண்டாவது வெற்றியை பதிவு செய்யுமா லக்னோ?

டாஸ் வென்ற ஐதராபாத் அணி பவுலிங் தேர்வு - இரண்டாவது வெற்றியை பதிவு செய்யுமா லக்னோ?
டாஸ் வென்ற ஐதராபாத் அணி பவுலிங் தேர்வு - இரண்டாவது வெற்றியை பதிவு செய்யுமா லக்னோ?
Published on

15-வது சீசன் ஐபிஎல் போட்டியில் லக்னோ அணிக்கு எதிரான ஆட்டத்தில், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி டாஸ் வென்று பவுலிங்கை தேர்வு செய்துள்ளது.

2022-ம் ஆண்டுக்கான 15-வது சீசன் ஐபிஎல் போட்டி மும்பை மற்றும் புனேவில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடர் கடந்த மார்ச் 26-ம் தேதி தொடங்கிய நிலையில், தற்போது 11 போட்டிகள் நிறைவடைந்துள்ளன. இந்நிலையில், டி.ஒய் பாட்டீல் மைதானத்தில் 12-வது சூப்பர் லீக் போட்டி நடைபெறுகிறது.

இந்தப் போட்டியில், கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ அணியும், கேன் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் அணியும் முதன்முறையாக மோதுகின்றன. இந்நிலையில், டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணியின் கேன் வில்லியம்சன் பவுலிங்கை தேர்வு செய்துள்ளார். இதையடுத்து லக்னோ அணி பேட்டிங்கில் களமிறங்குகிறது.

லக்னோ அணி தனது அறிமுகப் போட்டியான முதல் போட்டியில் குஜராத் அணியிடம் 2 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த பின்னர், சென்னை அணிக்கு எதிரானப் போட்டியில் அசத்தலாக விளையாடி தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. இதனால் தனது 2-வது வெற்றியை பதிவு செய்யும் முனைப்பில் களமிறங்க உள்ளது. துஷ்மந்திரா சமீராவுக்குப் பதிலாக ஜேசன் ஹோல்டர் அறிமுகமாகிறார்.

சன்ரைசர்ஸ் அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான முதல் போட்டியில், 61 ரன்கள் வித்தயாசத்தில் தோல்வியை தழுவியது. இதனால், தனது முதல் வெற்றியை பதிவுசெய்யும் வகையில் களமிறங்குகிறது.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் வீரர்கள்:

அபிஷேக் சர்மா, ராகுல் திரிபாதி, கேன் வில்லியம்சன் (கேப்டன்), நிக்கோலஸ் பூரன் (விக்கெட் கீப்பர்), ஐடன் மார்க்ராம், அப்துல் சமத், வாஷிங்டன் சுந்தர், ரொமாரியோ ஷெப்பர்ட், புவனேஷ்வர் குமார், நடராஜன், உம்ரான் மாலிக்.

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் வீரர்கள்:

கேஎல் ராகுல் (கேப்டன்), குயின்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), எவின் லூயிஸ், மனிஷ் பாண்டே, தீபக் ஹூடா, ஆயுஷ் பதோனி, ஜேசன் ஹோல்டர், க்ருணால் பாண்டியா, ஆண்ட்ரூ டை, ரவி பிஷ்னோய், ஆவேஷ் கான்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com