விசா விதிமுறையை மீறி தேர்தல் பரப்புரை - ருமேனியாவை சேர்ந்தவரிடம் விசாரணை

விசா விதிமுறையை மீறி தேர்தல் பரப்புரை - ருமேனியாவை சேர்ந்தவரிடம் விசாரணை
விசா விதிமுறையை மீறி தேர்தல் பரப்புரை - ருமேனியாவை சேர்ந்தவரிடம் விசாரணை
Published on

விசா விதிமுறையை மீறி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டதாக ருமேனியாவை சேர்ந்த நிகொய்டா என்பவரிடம் குடியுரிமை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

பெண்களுக்கான இலவச பேருந்து பயணத்திட்டம் தன்னை ஈர்த்ததாகக் கூறி, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுகவிற்கு ஆதரவாக அவர் வாக்கு சேகரித்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதை அடுத்து, தொழில் செய்யும் நோக்கில் விசா பெற்றுவிட்டு, அரசியலில் ஈடுபட்டதாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது.

இது குறித்து விளக்கம் அளிக்க அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்ட நிலையில், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள குடியுரிமை அலுவலகத்தில் நிகொய்டா ஆஜாரானார். குடியுரிமை அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்திய நிலையில், சுமார் 3 மணியளவில் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com