ஹாட்ரிக் கோல் அடித்து இந்திய வீராங்கனை வந்தனா அசத்தல்

ஹாட்ரிக் கோல் அடித்து இந்திய வீராங்கனை வந்தனா அசத்தல்

ஹாட்ரிக் கோல் அடித்து இந்திய வீராங்கனை வந்தனா அசத்தல்
Published on

டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் ஹாக்கி போட்டியில் இந்திய அணி கால் இறுதிக்கு முன்னேறியது. ஏ பிரிவில் நடைபெற்ற கடைசி லீக் ஆட்டத்தில் பிரிட்டன் அயர்லாந்தை வீழ்த்தியதை எடுத்து, 4-ம் இடம் பிடித்த இந்தியா கால் இறுதிக்கு முன்னேறியது.

வந்தனா அடித்த ஹாட்ரிக் கோல்களால், இந்தியா மகளிர் ஹாக்கி தனது கடைசி லீக் போட்டியில் தென்னாப்ரிக்காவை வீழ்த்தியது. நடப்பு ஒலிம்பிக் தொடரில் முதல் 3 லீக் ஆட்டங்களில் தோல்வியை சந்தித்திருந்த இந்திய அணி, 4-வது போட்டியில் அயர்லாந்தை வீழ்த்தியது. அதே நம்பிக்கையுடன் கடைசி லீக் போட்டியில் தென்னாப்ரிக்காவை எதிர்கொண்டது. ஆட்டத்தின் 4-வது நிமிடத்திலேயே இந்திய வீராங்கனை வந்தனா கோல் அடித்து, இந்தியாவின் நம்பிக்கையை அதிகரித்தார்.

தொடர்ந்து 17, 49வது நிமிடங்களிலும் கோல் அடித்து, ஹாக்கி வரலாற்றில் ஒலிம்பிக்கில் ஹாட்ரிக் கோல் அடித்த முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையைும் படைத்தார். கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டிய ஆட்டத்தில், இந்திய அணி 4க்கு 3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com