ஒலிம்பிக்: டேபிள் டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியா தோல்வி

ஒலிம்பிக்: டேபிள் டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியா தோல்வி
ஒலிம்பிக்: டேபிள் டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியா தோல்வி
Published on

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் டேபிள் டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்திய அணி தோல்வியை தழுவியது. சரத் கமல் - மணிகா பத்ரா இணை தவான் இணையிடம் 0-4 என்ற செட் கணக்கில் தோல்வியை தழுவியுள்ளது.

முன்னதாக, கொரோனா அச்சம் காரணமாக, தொடக்க விழா நடந்த அரங்கில் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை. காலியான தொடக்க விழாவில் வாண வேடிக்கைகள் கண்ணைப் பறித்த நிலையில், ஜப்பான் கலாசார நிகழ்ச்சிகளும் அரங்கேறின. இதில் ஜப்பான் பேரரசர் நருஹிட்டோ, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மனைவி ஜில் பைடன், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் உள்ளிட்ட விருந்தினர்கள் சுமார் 950 பேர் கலந்து கொண்டனர்.

தொடக்க விழாவில் ஆயிரத்து 824 டிரோன்கள் மூலம் மைதானத்தில் ஒளிவெள்ளம் பாய்ச்சப்பட்டது. ஒலிம்பிக் வரலாற்றில் முதன்முறையாக, ஆங்கில அகரவரிசைப்படி இல்லாமல், ஜப்பான் மொழியின் அகரவரிசைப்படி அணிகள் அணிவகுத்தன. இந்தியா அணியை ஹாக்கி அணி கேப்டன் மன்பிரீத் சிங்கும் குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோமும் தேசியக் கொடியேந்தி வழிநடத்திச்சென்றனர். ஆகஸ்ட் 8 வரை நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த 127 வீரர்கள் உள்பட சுமார் 11,000 வீரர்கள் பங்கேற்கின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com