சுயேச்சை வேட்பாளர்கள் இரு மடங்கு அதிகரிப்பு: சின்னம் ஒதுக்குவதில் தேர்தல் ஆணையத்துக்கு கடும் சவால்

சுயேச்சை வேட்பாளர்கள் இரு மடங்கு அதிகரிப்பு: சின்னம் ஒதுக்குவதில் தேர்தல் ஆணையத்துக்கு கடும் சவால்
சுயேச்சை வேட்பாளர்கள் இரு மடங்கு அதிகரிப்பு: சின்னம் ஒதுக்குவதில் தேர்தல் ஆணையத்துக்கு கடும் சவால்
Published on

மக்களவைத் தேர்தலில் சுயேச்சை வேட்பாளர்களின் எண்ணிக்கை‌ இருமடங்கு அதிகரித்துள்ளது. அவர்களின் பெரும்பாலான வேட்பாளர்கள் வீட்டு உபயோகப் பொருட்களையே சின்னங்களாக பெற்றுள்ளனர்.

ஒவ்வொரு தேர்தல் சீசனில் கட்சி சின்னங்கள் புதிது புதிதாக அறிமுகமாகி வருகிறது. வேட்பாளர்கள் கேட்கும் சின்னத்தை ஒதுக்குவதில் தேர்தல் ஆணையத்துக்கு கடும் சவாலாகவே இருக்கிறது. தேர்தல் நடப்பதற்கு முன்பு பதிவு செய்யப்பட்ட, அங்கீகரிக்கப்படாத கட்சிகளுக்கு சின்னங்கள் ஒதுக்குவதை தேர்தல் ஆணையம் வழக்கமாக கொண்டுள்ளது. அதன்படி, இந்தமுறை மக்களவைத் தேர்தலுக்காக நாடு முழுவதும் 198 சின்னங்களுக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கியுள்ளது. 

2014ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் 87 சின்னங்களை தேர்தல் ஆணையம் அங்கீகரித்த நிலையில், தற்போது இரு மடங்காக உயர்ந்துள்ளது. இம்முறை போட்டியிடும் வேட்பாளர்களில் பலர் அன்றாடம் பயன்படுத்தும் வீட்டு உபயோகப் பொருட்கள், தொலைத் தொடர்பு சாதனங்கள், விளையாட்டுப் பொருட்கள், உள்ளிட்டவை கேட்டு விண்ணப்பித்துள்ளனர். ஏர் கண்டிஷன், டார்ச் லைட், சப்பாத்திக் கட்டை, எரிவாயு அடுப்பு, டீ கப் உள்ளிட்ட பொருட்களே அதிகம் இடம்பெற்றுள்ளன. வேட்பாளர்கள் மத்தியில் பழங்கள் மற்றும் காய்கறிகளை தேர்வு செய்ய ஆர்வம் காட்டியதாக தேர்தல் ஆணைய‌ம் தெரிவித்துள்ளது. 

தமிழகத்தில் வரும் மக்களவைத்தேர்தலில் 530 சுயேச்சை வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். அதில் கரூர் தொகுதியில் அதிகப்படியாக 33 சுயேச்சை வேட்பாளர்கள் களமிறங்குகிறார்கள். அவர்களுக்கு டெலிஃபோன், எலக்டிக் போல், காலிஃபிளவர், கப் அண்ட் சாசர், ஃபிரை பேன், வேர்க்கடலை, செருப்பு உள்ளிட்ட சின்னங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த தொகுதிக்கு அடுத்தபடியாக தென் சென்னையில் போட்டியிடும் 31 சுயேச்சை வேட்பாளர்களுக்கு கம்ப்யூட்டர், கத்திரிகோல், குக்கர், தண்ணீர் பாட்டில், விசில் உள்ளிட்ட சின்னங்கள் வழங்கப்பட்டுள்ளன. சின்னங்கள் தங்கள் வாக்காளர்களுடன் நெருங்கிய தொடர்பு இருப்பதாக வேட்பாளர்கள் கருதுவதால், அதிக எண்ணிக்கையிலான வேட்பாளர்கள் வீட்டுப் பொருட்களை பெற்றுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com