”பருவங்கள் மாறி வர வருடங்கள் ஓடி விட..” -மகளின் 20 வருஷ போட்டோக்களை timelapse செய்த அப்பா!

”பருவங்கள் மாறி வர வருடங்கள் ஓடி விட..” -மகளின் 20 வருஷ போட்டோக்களை timelapse செய்த அப்பா!
”பருவங்கள் மாறி வர வருடங்கள் ஓடி விட..” -மகளின் 20 வருஷ போட்டோக்களை timelapse செய்த அப்பா!
Published on

பெற்றோர்களுக்கு தங்களது குழந்தைகள் வளர்ந்து வருவது என்றாலே ஒருவித சந்தோஷம் இருக்கும். அந்த சந்தோஷம் இந்த டச்சு இயக்குநரையும் விட்டுவைக்கவில்லை என்பதை அண்மையில் வைரலான வீடியோவின் மூலம் தெரிந்துகொள்ளலாம்.

நெதர்லாந்தைச் சேர்ந்த டச்சு திரைப்பட இயக்குநரான ஃபிரான்ஸ் ஹோஃப்மீஸ்டர் என்பவர் தன்னுடைய மகள் பிறந்ததில் இருந்து இளம் பெண்ணாக மாறும் வரை எடுத்த போட்டோக்களை டைம்லேப்ஸ் வீடியோவாக யூடியூப் தளத்தில் கடந்த 2019ம் ஆண்டே பதிவேற்றம் செய்திருந்தார். கிட்டத்தட்ட 2.4 கோடிக்கும் அதிகமான வியூஸ்களை பெற்றிருந்த அந்த வீடியோ தற்போது ரெடிட் தளத்தில் பகிரப்பட்டு பலரது கவனத்தையும் பெற்று வருகிறது.

ஃபிரான்ஸ் தன்னுடைய மகள் பிறந்ததில் இருந்து வீட்டின் ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருக்கச் செய்து வாராவாரம் அதே பேக்கிரவுண்டில் வைத்து ஃபோட்டோ எடுத்து வந்திருக்கிறார். அந்த புகைப்படங்களை வைத்தே டைம்லேப்ஸ் வீடியோவாக மாற்றி அதனை யூடியூபில் பதிவேற்றியிருக்கிறார்.

அந்த வீடியோவின் பதிவில், “மனித வாழ்வின் மிகவும் மர்மமான, ஆழமான செயல்முறைகளில் ஒன்றுக்கு தற்போது நீங்கள் சாட்சியாக இருக்கப் போகிறீர்கள். - வெறும் ஐந்தே நிமிடங்களில் வளரும் செயல்முறையை காணப்போகிறீர்கள்” என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இந்த வீடியோதான் தற்போது ரெடிட் தளத்தில் பகிரப்பட்டிருக்கிறது. “தன்னுடைய மகள் 20 வயதை அடையும் வரை தந்தை ஒருவர் தொடர்ந்து எடுத்து வந்த போட்டோவின் வீடியோதான் இது” எனவும் கேப்ஷன் இடப்பட்டிருக்கிறது. 42 ஆயிரத்துக்கும் மேலான மக்களால் ஈர்க்கப்பட்ட இந்த வீடியோவில் பலரும் நெகிழ்ச்சியாக பாராட்டுகளை தெரிவித்திருக்கிறார்கள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com