மதுரை: அரசு மருத்துவமனைகளில் அதிகரித்துள்ள உயிரிழப்புகள்... காரணம் இதுதான்

மதுரை: அரசு மருத்துவமனைகளில் அதிகரித்துள்ள உயிரிழப்புகள்... காரணம் இதுதான்
மதுரை: அரசு மருத்துவமனைகளில் அதிகரித்துள்ள உயிரிழப்புகள்... காரணம் இதுதான்
Published on

மதுரை அரசு மருத்துவமனையில் கடந்த 7மாதங்களில் உயிரிழப்புகள் அதிகரித்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல்கள் கிடைத்துள்ளன. 


நெல்லையை சேர்ந்த பிரம்மா என்பவர் மதுரை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் ஏற்படும் உயிரிழப்புகள் தொடர்பாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் சுகாதாரத் துறைக்கு விண்ணப்பித்திருந்தார்.

இதற்கு சுகாதார பணிகள் துணை இயக்குனர் தரப்பில் அளிக்கப்பட்ட பதிலில் கடந்த மார்ச் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான 7மாதத்தில் மதுரை மாவட்டத்தில் உள்ள அரசு ராஜாஜி மருத்துவமனை மற்றும் திருமங்கலம், மேலூர், சோழவந்தான், வாடிப்பட்டி, பேரையூர், திருப்பரங்குன்றம் உள்ளிட்ட 9 அரசு மருத்துவமனைகளில் கொரோனாவால் 436 பேரும் மற்றும் புற்றுநோய், தற்கொலைகள், விபத்துகள், தீவிர நோய்கள் உள்ளிட்ட பல்வேறு தொற்றுகளால் 5 ஆயிரத்தி 511 பேர் உயிரிழந்துள்ளதாக பதில் அளித்துள்ளனர். 


இதில் கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தில் உயிரிழந்த 436 பேரில், மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் 245 பேரும் அண்டை மாவட்டங்களான தேனி, திண்டுக்கல், சிவகங்கை, தென்காசி உள்ளிட்ட 12 மாவட்டங்களை சேர்ந்த 191 பேரும் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆர்.டி.ஐ.யில் கிடைக்கப்பட்ட தகவலின் அடிப்படையில் அரசு மருத்துவமனைகளில் உயிரிழப்புகள் அதிகரித்ததாக எழுந்த புகார் குறித்து மதுரை மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர். 


அதில், கடந்த ஆண்டு இறப்பை ஒப்பிடுகையில் உயிரிழப்பு என்பது சராசரியாகவே உள்ளதாகவும் அரசு மருத்துவமனைகளில் தரமான சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருவதால் பல்வேறு உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டு வருவதாக தெரிவித்தனர். மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் மகப்பேறு, குழுந்தைகள் நலம், மற்றும் விபத்து பிரிவுகளில் உயரிய தொழில்நுட்ப மருத்துவ உபகரணங்களை பயன்படுத்தி தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதால் பொதுமக்கள் அதீத நம்பிக்கையுடன் அரசு மருத்துவமனைகளை நாடிவருவதாக தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com