உணவைத் தேடி: வனங்களில் இருந்து கடைகளை நோக்கி படையெடுக்கும் மலபார் அணில்கள்

உணவைத் தேடி: வனங்களில் இருந்து கடைகளை நோக்கி படையெடுக்கும் மலபார் அணில்கள்
உணவைத் தேடி: வனங்களில் இருந்து கடைகளை நோக்கி படையெடுக்கும் மலபார் அணில்கள்
Published on

சிம்ஸ் பூங்கா பகுதியில் உள்ள சாலையோர பழக் கடைகளில் காலை, மாலை வேளையில் குறிப்பிட்ட நேரங்களில் வந்து பழங்களை பெற்று உண்டு வரும் மலபார் அணிகள் இங்கு வரும் பார்வையாளர்களை பரவசப்படுத்தியுள்ளது.


நீலகிரி மாவட்டம் அடர்ந்த காடுகளை கொண்டுள்ளதால் பல்வேறு வகையான வன விலங்குகள் உள்ளன. குறிப்பாக அடர்ந்த காடுகளில் அறியவகை மலபார் அணில் வகைகள் உள்ளன. மரங்களில் சுற்றி திரியும் இவ்வகைகயான மலபார் அணில்கள் பழங்களை உண்டு வாழ்கின்றன. இவை மிகவும் மென்மையான குணாதிசயங்களை கொண்டதால் மனிதர்களை கண்டாலே காடுகளுக்குள் ஓடி ஒழிந்து கொள்ளும்.


மனிதர்களை அண்டாத இவை குன்னூர் சிம்ஸ் பூங்கா பகுதியில் பழக் கடைகள் வைத்திருக்கும் ஒரு குறிப்பிட்ட பெண்ணிடம் வந்து பழங்களை பெற்று உண்டு வாழ்ந்து வருகிறது. முன்பு நாள்தோறும் அங்குள்ள பழக் கடைகளுக்கு ஒரு மலபார் அணில் மட்டுமே வந்து சென்ற நிலையில் தற்போது மூன்று அணில்கள் வந்து செல்கின்றன.


சிம்ஸ் பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகள் மலபார் அணில்கள் கடைகளில் பழங்களை உண்பதை ஆர்வத்துடன் பார்த்து செல்கின்றனர். வனங்கள் அழிக்கப்படுவதாலும், காடுகளில் பழங்கள் கிடைக்காததாலும் இந்த அறியவகை அணில்கள் உணவு தேவைக்காக அதன் இயல்பு வாழ்க்கை முறையை மாற்றிக் கொண்டு நகர் பகுதிகளில் உள்ள கடைகளை நோக்கி வருகை தருவது குறிப்பிடதக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com