கெஜ்ரிவால் இல்லத்தில் டெல்லி போலீசார் அதிரடி ரெய்டு

கெஜ்ரிவால் இல்லத்தில் டெல்லி போலீசார் அதிரடி ரெய்டு
கெஜ்ரிவால் இல்லத்தில் டெல்லி போலீசார் அதிரடி ரெய்டு
Published on

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் இல்லத்தில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

டெல்லியில் முதலமைமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி ஆட்சி செய்து வருகிறது. அரசாங்கத்தின் விளம்பர செலவு அதிகரித்து வருவது தொடர்பாக சில தினங்களுக்கு முன்பு முதல்-மந்திரி கெஜ்ரிவால் வீட்டில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், தலைமை செயலாளர் அன்ஷு பிரகாஷ் கலந்துகொண்டார். அப்போது தலைமைச் செயலாளருக்கும், ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

 இந்தப் பிரச்னை தொடர்பாக ஆளுநர் அனில் பைஜாலிடம் புகார் அளித்த அன்ஷு, பிரகாஷ் ஜர்வால் மற்றும் அமானத்துல்லா கான் ஆகிய ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் தன்னை தாக்கியதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். ஆனால் இந்தக் குற்றச்சாட்டை ஆம் ஆத்மி கட்சி மறுத்துவிட்டது.

தலைமைச் செயலாளர் மீது ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள் தாக்குதல் நடத்தியதாக எழுந்த புகார் குறித்து ஆளுநர் அனில் பைஜாலிடம் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தாமாக முன்வந்து அறிக்கை கேட்டார். இந்த விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியும் ஆம் ஆத்மி மீது குற்றம்சாட்டியது.

இந்நிலையில், முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டில் டெல்லி போலீசார் இன்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர். சோதனைக்காக சுமார் 150 போலீசார் குவிக்கப்பட்டனர். இந்தச் சோதனை நடந்தபோது கெஜ்ரிவால் வீட்டில்தான் இருந்தார். சுமார் 21 சிசிடிவி கேமிராக்களின் புட்டேஜை போலீசார் பறிமுதல் செய்தனர். அதில் 7 கேமிராக்களின் பதிவுகள் வேலை செய்யவில்லை. தலைமை செயலாளர் தாக்கப்பட்டது குறித்த சி.சி.டி.வி. வீடியோ பதிவுகள் உள்ளதா என்று ஆய்வு மேற்கொண்டனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், பேச்சுவார்த்தை நடந்ததாக கூறப்படும் அறையில் கேமிரா இல்லை என்றனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com