‘ஆம் ஆத்மி கூட்டணி குறித்து நாளை அதிகாரப்பூர்வ செய்தி ’ - காங். ஷீலா தீட்ஷித்

‘ஆம் ஆத்மி கூட்டணி குறித்து நாளை அதிகாரப்பூர்வ செய்தி ’ - காங். ஷீலா தீட்ஷித்
‘ஆம் ஆத்மி கூட்டணி குறித்து நாளை அதிகாரப்பூர்வ செய்தி ’ - காங். ஷீலா தீட்ஷித்
Published on

டெல்லியில் காங்கிரஸ் - ஆம் ஆத்மி இடையே கூட்டணி அமைவதற்கான சாத்தியம் இருப்பதாகவும் இது குறித்து இன்று மாலையோ நாளையோ அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் டெல்லி காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஷீலா தீட்ஷித் தெரிவித்துள்ளார். 

2019 நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 11ஆம் தேதி முதல் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. முதற்கட்ட வாக்குப் பதிவு நெருங்கிவிட்ட நிலையில், காங்கிரஸ் கட்சி இன்னும் வேட்பாளர் பட்டியலை நிறைவு செய்யாமல் இருக்கிறது. 

டெல்லியில் உள்ள ஏழு தொகுதிக்கான பங்கீடு குறித்து காங்கிரஸ் -ஆம் ஆத்மி கட்சிகளுக்கிடையே இழுபறி நீடித்து வருவதால் அங்கு கூட்டணி அமைவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஷீலா தீட்ஷித் இரு கட்சிகளுடன் கூட்டணி அமைய சாத்தியம் இருப்பதாகவும் இது குறித்த அதிகாரப்பூர் அறிவிப்பு இன்று மாலையோ நாளையோ வெளியாகும் எனத் தெரிவித்தார். 

டெல்லியில் உள்ள ஏழு தொகுதிக்கு காங்கிரஸ் சார்பில் 80க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். வேட்பாளர்கள் யார் என்ற அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

முன்னதாக, காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் ஆத் ஆத்மி கட்சியும் இணைய வாய்ப்புள்ளதாக கருதப்பட்டது. இருதரப்பினரிடையே பேச்சு வார்த்தையும் நடைபெற்று வந்தது. இந்தக் கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி நிலை இருந்து வந்தது. ஆனால், டெல்லியில் மொத்தமுள்ள 7 மக்களவைத் தொகுதிகளில் 6 இடங்களுக்கான வேட்பாளர்களை ஆம் ஆத்மி திடீரென அறிவித்துவிட்டது. காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைக்க விரும்பவில்லை என்றும் கெஜ்ரிவால் குற்றம்சாட்டினார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com