நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இத சாப்பிடுங்க..!

நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இத சாப்பிடுங்க..!
நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இத சாப்பிடுங்க..!
Published on

ஏபிசி டிடாக்ஸ் பானம்
நம் உடல் எடுத்துக்கொள்ளவேண்டிய முக்கியமான பானங்களில் ஒன்று ஏபிசி பானம். ஆப்பிள், பீட்ரூட் மற்றும் கேரட் சேர்ந்த இந்த டிடாக்ஸ் பானம், ஏபிசி டிடாக்ஸ் என்று சொல்லப்படுகிறது. இது கல்லீரல், சிறுநீரகம், குடல் மற்றும் தோலில் தங்கியிருக்கும் நச்சுக்களை வெளியேற்றி உடலை ஆரோக்யமாக்குகிறது. மேலும் புத்துணர்வுடன் வைக்கிறது.

ஆப்பிள்
ஒரு நாளைக்கு ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவரை அணுகத் தேவையில்லை என்பது நம் எல்லோருக்கு தெரியும். வைட்டமின் ஏ, பி, பி1, ஃபோலேட், நியாசின், துத்தநாகம், தாமிரம் மற்றும் பொட்டாசியம் போன்ற ஊட்டச்சத்து மிகுந்தது. இதில் பித்த உற்பத்தியைத் தூண்டும், கல்லீரலில் உள்ள நச்சுகளை அகற்றும் ஃப்ளாவனாய்டு என்ற எதிர்ப்புப் பொருள் உள்ளது. நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வைட்டமின் சி இதில் இருக்கிறது.

பீட்ரூட்
பீட்ரூட்டில் வைட்டமின் சி, ஃபோலேட், பொட்டாசியம், இரும்பு மற்றும் மாங்கனீஸ் போன்ற சத்துகள் நிறைந்துள்ளன. இதில் லைகோபின் மற்றும் அந்தோசைனின் போன்ற ஆக்ஸிஜனேற்ற மூலக்கூறுகள் நிறைந்திருக்கின்றன. இவைதான் காய்க்கு நிறத்தைக் கொடுப்பதோடு நோயெதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்க உதவும். உடலில் கெட்ட கொழுப்பை சேரவிடமால் கட்டுப்படுத்துகிறது. இதில் இருக்கும் அழற்சி பண்புகள் கல்லீரலைப் பாதுகாக்கும்.

கேரட்
பீட்ரூட்டைப் போலவே கேரட்டும் ஒரு வேர்க் காய். நார்ச்சத்து மிகுந்தது. இதில் வைட்டமின் ஏ, பி, பி1, பி2, பி3, நியாசின், ஃபோலேட், பான்டோதெனிக் அமிலம், கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் செலினியம் உள்ளன. இதில் பீட்டா கரோட்டின் நிறைந்துள்ளது. இது நம் கண்களை ஆரோக்யமாக வைக்கிறது. நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. உடலிலிருந்து நச்சுகளை வெளியேற்றுகிறது. கல்லீரலில் இருந்து பித்தம் மற்றும் கொழுப்பைக் குறைக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com